புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 செப்., 2015

தேசியமட்ட மெய்வன்மை தொடர் :பதக்கங்களை குவித்தது காட்லி

hartly
பாடசாலைகளின் மெய்வன்மை விளையாட்டு அவையின் ஏற்பாட்டில் மெய்வன்மை சங்கத்தின் அனு மதியுடன் நடத்தப்பட்ட
மெய்வன் மைப் போட்டியில் ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் மற்றும் 7வர்ண விருதுகள் ஆகியவற்றை பருத்தித்துறை காட்லிக் கல்லூரி பெற்றுக் கொண்டுள்ளது.
அநுராதபுரம் பொது விளையாட்டரங்கில் கடந்த 15ஆம், 16ஆம், 17ஆம் மற்றும் 18ஆம் திகதிகளில் நடைபெற்ற இந்தப்போட்டிகளில் 12வயதுக்குட்பட்ட நீளம்பாய்தலில் ஆர்.சுரேன் 4.1 மீற்றர் தூரம் பாய்ந்து வர்ணவிருதையும், 13 வயதுப் பிரிவில் உயரம் பாய்தலில் எஸ்.மிதுன்ராஜ் 1.3மீற்றர் தூரம் பாய்ந்து வர்ண விருதையும் 14 வயதுப் பிரிவில் தட்டெறிதலில் என்.பிரவீனன் 34.81மீற்றர் தூரம் எறிந்து வெள்ளி பதக்கத்தையும், எ.நிசாத் மகீபன் 29.03 மீற்றர் தூரம் எறிந்து வர்ண விருதையும், 14 வயதுப் பிரிவில் குண்டு எறிதலில் என்.பிரவீனன் 8.43 மீற்றர் தூரம் எறிந்து வர்ண விருதையும், 15வயதுப் பிரிவில் தட்டெறிதலில் பி.ஆனந் 11.69 மீற்றர் தூரம் எறிந்து வர்ண விருதையும், ரி.அபிசாந் 40.25 மீற்றர் தூரம் எறிந்து வெண் கலப்பதக்கத்தையும், பி.நிவேதன் 30.65மீற்றர் தூரம் எறிந்து வர்ண விருதையும், வி.வஜீன் 33.72 மீற்றர் தூரம் எறிந்து வர்ண விருதையும், 15 வயதுப் பிரிவில் உயரம் பாய்தலில் வி.வஜீன் 1.55 மீற்றர் பாய்ந்து வர்ணவிருதையும் பெற்றுக் கொண்டனர்.
பி.ஆனந் தட்டெறிதல் போட்டியில் 45.91மீற்றர் தூரம் எறிந்து 46வது ஜோன் காபட்கனிஸ்ட மெய்வன் மைப் போட்டியின் சிறந்த மெய் வன்மை வீரராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ad

ad