புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 டிச., 2015

‘ஐ.எஸ். ஜிகாதிகளுக்கு துருக்கி சிகிச்சை அளிக்கிறது’ ஈராக் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பரபரப்பு தகவல்


’காயம் அடைந்த ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு துருக்கி சிகிச்சை அளிக்கிறது’ என்று ஈராக் நாட்டின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.பி. மோவாபாக் அல்-ரூபே பரபரப்பு தகவலை வெளியிட்டு உள்ளது. 

சிரியா மற்றும் ஈராக்கில் செயல்பட்டு வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் உல

 க அமைதிக்கே அச்சுறுத்தலாக எழுந்து உள்ளனர். பாரீஸ் தாக்குதலை அடுத்து அவர்களுக்கு எதிரான தாக்குதலகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. ரஷியா, பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வான்வழி தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளனர். கடந்த ஆண்டே அமெரிக்கா வெளியிட்ட தகவலில் துருக்கி மூலம் ஐ.எஸ். தீவிரவாதிகள் கள்ளச்சந்தையில் ஆயில் விற்பனையில் ஈடுபடுகின்றனர் என்று குற்றம் சாட்டியது. 

ரஷியாவின் விமானம் சிரியா எல்லையில் துருக்கி விமானப்படையால் சுட்டு வீழ்த்தப்பட்டதை தொடர்ந்து, பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ். பிடியில் உள்ள பகுதிகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய்கள் டேங்கர்களில் அடைக்கப்பட்டு தீவிரவாதிகளால் துருக்கிக்கு அனுப்படுகிறது. ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு பொருளாதார ரீதியில் உதவியாக இருக்கும் கள்ள எண்ணெய் சந்தையை சீர்குலைக்க திட்டம் தீட்டிஉள்ள ரஷியா ஆயுள் டேங்கர்களை குறிவைத்து தாக்குதல் நடத்த தயாராகிஉள்ளது. 

இந்நிலையில் துருக்கியில் கள்ளச்சந்தையில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆயில் விற்பனையில் ஈடுபடுவதால் அவர்களுக்கு மில்லியன் கணக்காண பணம் கிடைக்கிறது என்று ஈராக் எம்.பி. தகவல் வெளியிட்டு உள்ளார். 

ஈராக் நாட்டின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகரும், எம்.பி.யுமான எம்.பி. மோவாபாக் அல்-ரூபே, காயம் அடைந்த ஐ.எஸ். ஜிகாதிகளுக்கு துருக்கி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் பரபரப்பு தகவல்கள் வெளியிட்டு உள்ளார். 

ரஷியா டைம்ஸ் பத்திரிக்கைக்கு பேட்டி அளித்து பேசிய அல் ரூபே ”துருக்கியில் கடந்த எட்டு மாதங்களில் மட்டும் சுமார் 800 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ஆயிலை, ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் கள்ளச்சந்தையில் விற்று உள்ளது. சிரியா மற்றும் ஈராக்கில் எடுக்கப்படும் ஆயில் டேங்கர்கள் மூலம் துருக்கி எல்லைக்கு கொண்டு செல்லப்படுகிறது, அங்கு சர்வதேச விலையில் இருந்து பாதி விலையில் ஆயில் விற்பனை செய்யப்படுகிறது,” என்று கூறிஉள்ளார்.

துருக்கி பகுதியில் கச்சா எண்ணெய் சுத்திரிக்கப்படுகிறது. துருக்கி மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது. அல்லது பைப் லைன் வழியாக சர்வதேச சந்தையில் விற்கப்படுகிறது என்று குறிப்பிட்டு உள்ளார். 

சர்வதேச நாடுகள் தாக்குதலை சமாளிக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு கள்ளச்சந்தையில் ஆயில் விற்பனையில் இருந்து கிடைக்கும் தொகையானது ‘ஆக்ஸிஜனாக’ அமைந்து உள்ளது. காயம் அடையும் தீவிரவாதிகளுக்கு துருக்கி மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. கள்ளச்சந்தையில் ஆயில் விற்பனையானது துருக்கி அரசுக்கு தெரிந்தே நடைபெறுகிறது. ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது துருக்கி ராணுவத்திற்கு ஒரு அனுதாபம் உள்ளது. அவர்கள் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஊடுருவவும் அனுமதி வழங்குகின்றனர். மற்ற நாடுகளின் உதவியின்றி எந்தஒரு தீவிரவாத இயக்கமும் செயல்பட முடியாது. என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டை ரூபே முன்வைத்து உள்ளார். 

கள்ளச்சந்தையில் ஆயில் விற்பனை செய்யப்படுவது தொடர்பாக துருக்கி விளக்கம் அளிக்கவேண்டும் என்று ரஷியா வலியுறுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

ad

ad