புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 டிச., 2015

பாடகர் கோவனுக்கு எதிரான தமிழக அரசின் மனு தள்ளுபடி

பாடகர் கோவனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம்
தள்ளுபடி செய்தது.
 
"மூடு டாஸ்மாக்கை மூடு" பாடலை இயற்றி பாடிய திருச்சி மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மைய கலைக் குழுவைச் சேர்ந்த கோவனை, கடந்த மாதம் 30-ம் தேதி அதிகாலையில் திருச்சி குழுமணி அருகில் உள்ள அரவனூரில் காவல்துறையினர் கைது செய்து செய்தனர். இதையடுத்து, அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், கோவனை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு, சென்னை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில், குற்றப்பிரிவு காவல்துறையினர் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, கோவனை 2 நாள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறைக்கு அனுமதி அளித்தார்.

இதனிடையே, 2 நாள் போலீஸ் காவலை ரத்து செய்யக்கோரியும், ஜாமீன் வழங்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோவன் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், போலீஸ் காவலை ரத்து செய்ததோடு, கோவனுக்கு ஜாமீனும் வழங்கியது. இதையடுத்து, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கோவன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில், கோவனின் போலீஸ் காவலை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் கடந்த 20ம் தேதி தமிழக அரசு மனுத் தாக்கல் செய்தது.
இந்த மனு,  உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரிக்க எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறி தமிழக அரசின் மனுவைபாடகர் கோவனுக்கு எதிரான தமிழக அரசின் மனு தள்ளுபடி

ad

ad