புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஜன., 2016

நல்லாட்சியை நழுவ விடமாட்டேன் : பிரதமர் ரணில் தெரிவிப்பு

வட கிழக்கு ஒன்றாக இருக்கும்போது ஆட்சியை கவிழ்க்க முடியாது அனைத்து மக்களும் எம்முடன் இருப்பதால் ஒருபோதும் நல்லாட்சியை கை நழுவவிடமாட்டோம் என்று இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 

நல்லாட்சி அரசின் ஒரு வருடப் பூர்த்தி என்ற புதிய அரசின் ஒரு வருடப் பூர்த்தி நிகழ்விலேயே இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

இந்த நிகழ்வு சர்வதேச பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது பிரதான எதிர்கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் ஏனைய பிரதானக் கட்சிகளும் இணைத்து முன்னெடுக்கப்படும் நல்லாட்சி தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

இந்த ஆண்டில் சர்வதேச நாடுகளின் பொருளாதாரத்தில் பாரிய வீழச்சி ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்த அவர் இலங்கையின் பொருளாதாரத்தில் எந்த வீழச்சியும் ஏற்படவில்லை என்பதை நல்லாட்சியின் பெருமையாக கூறுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

வடக்கும் கிழக்கும் ஒன்றாக இருக்கும்போதும் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லீம்கள் ஒன்றாக இருக்கும்போதும் நகரம் கிராமம் ஒன்றாக இருக்கும்போதும் எனது ஆட்சியை எவராலும் கவிழ்க்க முடியாது என்றும் பிரதமர் ரணில் சூளுறை விடுத்தார்.

ad

ad