ஞாயிறு, ஜனவரி 31, 2016

யோஷித சாதாரண சிறையில் அடைக்கப்பட்டுள்ளர்

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யோஷித ராஜபக்ஸ மற்றும் ஏனைய நால்வரும் சாதாரண சிறையில் தடுத்து வைக்கப்பட்டு
ள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாதாரண சிறைக்கைதிகளுக்கு வழங்கப்படுகின்ற சலுகைகளே அவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான துஷார உபுல் தெனிய ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
கைதிகளை பார்வையிடுவதற்கு ஒரு நாளைக்கு மூன்று பேருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு காலை 8 மணி முதல் மாலை 5 மணிக்குள் எந்த நேரத்திலும் பார்க்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அவர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்க முடியும் என்பதோடு அதற்கான கோரிக்கை எதுவும் இதுவரையும் முன்வைக்கப்படவிலலை என சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்தார்.
இதேவேளை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலபொடஅத்தே ஞானசார தேரர் சுகயீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.