புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

31 ஜன., 2016

கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் ரசிகரை காப்பற்றும் முயற்சியில் விராட் கோலி?

வீட்டில் தேசிய கொடியை பறக்க வைத்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் ரசிகரை காப்பற்றும் முயற்சியில்
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலியின் குடும்பத்தினர் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவம் குறித்து விராட் கோலியிடம் கருத்து கேட்டு அதன்படி நடக்க அவரது சகோதரர் விகாஸ் கோலி முடிவு செய்துள்ளார். கைது செய்யப்பட்டு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையை எதிர்நோக்கியுள்ள உமர் ட்ராசை மன்னித்து விடுவிக்க ஏதாவது சட்ட நுணுக்கம் உள்ளதா? என்றும் இது தொடர்பாக பாகிஸ்தான் அரசை அணுகவும் விகாஸ் கோலி முடிவு செய்திருப்பதாகவும், ஆனால் விராட் கோலியின் அனுமதிக்கு பிறகே எதையும் செய்ய வேண்டுமெனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து விகாஸ் கோலி கூறுகையில்,'' இந்த சம்பவம் எங்களை வெகுவாகவே பாதித்துள்ளது. அந்த ரசிகருக்காக வருத்தப்படுகிறோம். இது தொடர்பாக பாகிஸ்தான் அரசை எந்த ரீதியில் தொடர்பு கொள்வது குறித்து விவாதித்து வருகிறோம்'' என்றார். 

பாகிஸ்தானை சேர்ந்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ''நாட்டின் இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் விதத்தில் செயல்பட்ட அந்த ரசிகருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைப்பது உறுதி'' என தெரிவித்துள்ளார்.

இந்திய- ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான 2வது ஒருநாள் போட்டியில் விராட் கோலி 90 ரன்கள் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார், இதனால் உற்சாகமமைந்த அவரது தீவிர ரசிகரான பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த உமர் ட்ராஸ், தனது வீட்டு மொட்டை மாடியில் இந்திய தேசிய கொடியை பறக்க விட்டதால், கைது செய்யப்பட்டார்.