செவ்வாய், மார்ச் 15, 2016

ஜெனீவாவில் பேரெழுச்சியுடன் நிறைவடைந்த நீதிக்கான பேரணி!


ஈழத்தில் நிகழ்த்தப்பட்ட இனவழிப்பிற்கு நீதிகோரி ஐக்கிய நாடுகள் சபை நோக்கிய பேரணி ஜெனீவாவில் பேரெழுச்சியுடன் நிறைவடைந்துள்ளது. 
இன்றைய தினம் ஜெனீவா பிரதான புகையிரத நிலையத்திற்கு அண்மையில் உள்ள திடலில் ஆரம்பமான இந்த பேரணி முருகதாசன் திடலை நோக்கி நகர்ந்து சென்றது
இந்நிலையில் அங்கு தமிழீழ தேசிய கொடியேற்றப்பட்டு பேரணிக்கான நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன.
இந்தப் பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தமது ஆதரவினை தெரிவித்திருந்தனர்.
இதேவேளை தமிழக மற்றும் ஈழ ஆதரவாளர்கள் இந்தப் பேரணியில் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.- See more at: http://www.tamilwin.com/show-RUmuyDSYSXnw2C.html#sthash.FO0y4ouK.dpuf