புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 மார்., 2016

T20 உலகக்கிண்ண ‘சூப்பர்-10’ நாளை முதல் ஆட்டத்தில் இந்தியா- நியூசிலாந்து அணிகள்

T20 உலகக்கிண்ண ‘சூப்பர்-10’ சுற்றில் நாளை நடக்கும் முதல் ஆட்டத்தில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் நாக்பூரில் மோதுகின்றன.
டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் தகுதி சுற்று ஆட்டங்கள் நேற்றுடன் முடிவடைந்தன. இதில் ஆப்கானிஸ்தான், வங்கதேச அணிகள் ‘சூப்பர்-10’ சுற்றுக்கு தகுதி பெற்றன.

‘சூப்பர்- 10’ சுற்றுப் போட்டிகள்:-

‘சூப்பர்- 10’ சுற்றில் விளையாடும் 10 அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

‘குரூப்-1’ பிரிவில் நடப்பு சாம்பியன் இலங்கை, மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளன.

‘குரூப்-2’ பிரிவில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா, பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, வங்கதேசம் இடம்பெற்றுள்ளன.

அரையிறுதி வாய்ப்பு:-

இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும்.

‘லீக்’ போட்டிகளின் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

‘சூப்பர்- 10’ சுற்றில் முதல் ஆட்டம்:

முதல் ஆட்டத்தில் குரூப் 2 பிரிவில் இருக்கும் இந்தியா– நியூசிலாந்து அணிகள். நாக்பூரில் நாளை மோதுகின்றன.

ஆசியக்கிண்ணத்தை கைப்பற்றிய டோனி தலைமையிலான இந்திய அணி மிகுந்த நம்பிக்கையில் இந்த போட்டியில் களம் காண்கிறது.

இந்திய அணி கடைசியாக விளையாடிய 11 டி20 ஆட்டத்தில் 10ல் வெற்றி பெற்று முத்திரை பதித்தது.

இந்திய அணியில் கோஹ்லி, ரோஹித் சர்மா, ரெய்னா, தவான், அணித்தலைவர் டோனி போன்ற சிறந்த அதிரடி துடுப்பாட்ட வீரர்களும், அஸ்வின், நெஹ்ரா, பும்ரா போன்ற சிறந்த பவுலர்களும் அணியில் உள்ளனர்.

சமபலத்துடன் காணப்படும் இந்திய அணி முதல் போட்டியிலே வெற்றிக் கணக்கை தொடங்கலாம்.

நியூசிலாந்து அணியை பொறுத்தவரை அணித்தலைவர் வில்லியம்சன், குப்தில், கோலின் முன்ரோ, ரோஸ் டெய்லர், சவுத்தி, நாதன் மெக்குல்லம் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

அதிரடி வீரர் பிரன்டன் மெக்குல்லமின் ஓய்வு அந்த அணிக்கு சற்று பாதிப்பை ஏற்படுத்தும். நியூசிலாந்து, இந்தியாவுக்கு எல்லா வகையிலும் சவால் கொடுத்து விளையாடக் கூடியது என்பதால் நாளையப் போட்டி விறுவிறுப்பாக இருக்கும்.

இந்தியா:

டோனி (அணித்தலைவர்), தவான், ரோஹித் சர்மா, விராட் கோஹ்லி, ரெய்னா, யுவராஜ் சிங், ஹர்த்திக் பாண்ட்யா, ஜடேஜா, அஸ்வின், பும்ரா, நெக்ரா, ரஹானே, ஹர்பஜன் சிங், முகமது ஷமி, பவான் நெகி.

நியூசிலாந்து:

வில்லியம்சன் (அணித்தலைவர்), குப்தில், டெய்லர், கோலின் முன்ரா, கோரி ஆண்டர்சன், எலியாட், சவுத்தி, நாதன் மெக்குல்லம், போல்ட், மெக்லகன், ஆடம் மிலின், ஹென்றி நிக்கோலஸ், ரோஞ்சி, சான்ட்னெர், இஷாசோதி.

ad

ad