புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 செப்., 2016

தியாக தீபம் திலீபனின் 29ஆவது நினைவுதினம் அனுஷ்டிப்பு

தியாகதீபம் திலீபன் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த 29ஆவது  தினமாகிய இன்றைய தினத்தில்  நல்லூர் ஆலயச் சூழலில் அமைந்துள்ள திலீபனின் நினைவுத்தூபியில் அஞ்சலி செலுத்தப்பட்டது. 

இன்று காலை  பொதுமக்கள் சிலரால் மலர்தூவி சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர்  காலை 10 மணியளவில் ஜனநாயகப் போராளிகள் கட்சியினரால் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ச்சியாக 12 தினங்களும் நினைவுச் சுடர் ஏற்றப்படும் எனவும் தெரிவித்தனர். மேலும் தமிழர் பிரதேசங்களில் தொடர்ச்சியாக திலீபன் நினைவு தினம் அனுஸ்டிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
கடந்த 1987 ஆம் ஆண்டு 5அம்சக் கோரிக்கைகயைமுன்வைத்து நல்லூர் ஆலயத்தின் வடக்குபக்கத்தில் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தார்.தொடர்ந்து 12 தினங்கள் நீர் ஆகாரம் எதுவுமின்றி உணவுதவிர்ப்பில் ஈடுபட்ட அவர் 26ஆம் திகதி ஈகைச் சாவடைந்தார்.

ad

ad