தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

புதன், ஆகஸ்ட் 08, 2018

அண்ணாவுக்கு வலது புறத்தில் கருணாநிதி... மெரினாவில் ஏற்பாடுகள் தீவிரம்!


மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலடக்கத்தை மெரினா கடற்கரையில் அண்ணா சமாதிக்கு அருகில் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று திமுக தரப்பில் கோரப்பட்டது.ஆனால், இதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்தது. அதையடுத்து திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அண்ணா சமாதிக்கு அருகிலேயே கருணாநிதியின் உடலடக்கம் செய்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று தீர்ப்பு அளித்துள்ளது.

அதையடுத்து மெரினாவில் அண்ணா சமாதிக்கு அருகில் கருணாநிதியின் உடலடக்கம் செய்வதற்கான இடங்களைத் தேர்வு செய்யும் பணியில் பொதுப்பணித் துறையினர் ஈடுபட்டனர். திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் துரைமுருகனும் இந்த ஆய்வில் பங்கேற்றார்.

அதில் அண்ணா சமாதிக்கு வலதுபுறம் உள்ள இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதையடுத்து இந்தப் பகுதி, அதிரடிப் படையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதையடுத்து உடலடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் துவங்கியுள்ளன.