புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 செப்., 2018

ஆப்கானுக்கு 250 என்ற வெற்றியிலக்கை நிர்ணயித்தது பங்களாதேஷ்


ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரின் 'சுப்பர்' சுற்றின் நான்காவது போட்டியில் இம்ருல் கை
ஸ் மற்றும் மாமதுல்லாவின் சிறந்த இணைப்பாட்டம் காரணமாக பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டினை இழந்து  249 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணித் தலைவர் மொஷ்ரபி மோர்டாசா முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தார். அதற்கிணங்க ஆரம்ப துடுப்பாட்டக்காரர்களாக லிட்டன் தாஸ் மற்றும் ஹுசைன் ஷான்டோ ஆகியோர் களம் நுழைந்தனர்.
இவர்கள் இருவரும் ஜோடி சேர்ந்து 16 ஓட்டங்களை பெற்றுக் கொண்டபோது அணியின் முதல் விக்கெட் வீழ்த்தப்பட்டது. அதன்படி 4 ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் ஹுசைன் ஷான்டோ 6 ஓட்டத்துடன் அத்தாப் ஆலமின் பந்து வீச்சில் ரஹ்மத்திடம் பிடிகொடுத்து ஆட்டமிழக்க அடுத்து வந்த மொஹமட் மித்துனும் 2 ஓட்டத்துடன் முஜிபுர் ரஹ்மானின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ.முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
aff.jpg
இதனையடுத்து ரஹும் களமிறங்க அவருடன் இணைந்து ஜோடி சேர்ந்து ஆடிவந்த லிட்டன் தாஸ் நிதானமாக துடுப்பாட்டத்த‍ை வெளிப்படுத்த அணியின் ஓட்ட எண்ணிக்கை சீரானது.
முதல் 10 ஓவரில் பங்களாதேஷ் அணி இரண்டு விக்கெட்டுக்களை பறிகொடுத்து 34 ஓட்டத்தை பெற்றது. ஆடுகளத்தில் லிட்டன் தாஸ் 21 ஓட்டத்துடனம் ரஹிம் 5 ஓட்டத்துடனும் துடுப்பெடுத்தாடி வர 13.2 ஆவது ஓவரில் அணி 50 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
எனினும் ஆப்கானிஸ்தான் அணியின் சுழல் புயல் பந்துப் பறிமாற்றம் மேற்கொள்ள பந்தை கையில் எடுக்க பங்களாதேஷ் அணியின் விக்கெட்டுக்கள் அடுத்தடுத்து சரிய ஆரம்பித்தது. அதற்கிணங்க சிறப்பாக ஆடி வந்த லிட்டன் தாஸ் 41 ஓட்டத்துடன் ரஷித் கானின் பந்து வீச்சில் இஹசனுல்லாஹ் ஜெனட்டிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
இவரின் வெளியேற்றத்தையடுத்து களம் நுழைந்த ஷகிப் அல் ஹசனும் எதுவித ஓட்டமுமின்றி ரன்னவுட் முறையில் ஆட்டமிழக்க ரஹும் அவரின் வழியை பின்பற்றி ரன்னவுட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதனால் பங்களாதேஷ் அணி 20.5 ஓவரில் 5 விக்கெட்டுக்களை இழந்து 87 ஓட்டங்களை பெற்றது. அதன்பின் இம்ருல் கைஸுடன் மாமதுல்லா ஜோடி சேர்ந்தாடி வர அணியின் ஓட்ட எண்ணிக்கை 97 ஆக இருந்தபோது 25.2 ஆவது பந்தில் மாமதுல்ல ஒரு நான்கு ஓட்டத்தை விளாச  அணியின் ஓட்ட எண்ணிக்கை 100 ஐ கடந்தது. 
இவர்கள் இருவரும் இணைந்து பொறுப்புடன் இணைந்து ஆப்கானிஸ்தான் பந்து வீச்சாளர்களின் பந்துகளை நான்கு திசைகளிலும் அடித்தாட 44.1 ஆவது பந்தில் அணி 197 ஓட்டங்களை பெற்றிருந்தவேளை மாமதுல்லா ஒரு 6 ஓட்டத்தை விளாச அணியின் ஓட்ட எண்ணிக்கை 200 ஐ கடந்தது.
45.1 ஆவது பந்தில் இம்ருல் கைஸ் அரை சதம் கடந்தார். எனினும் 46.2 ஆவது ஓவரில் மாமதுல்லா 77 ஓட்டங்களை பெற்றிருந்தவேளை அத்தாப் ஆலமின் பந்து வீச்சில் ரஷித் கானிடம் பிடிகொடுத்து ஆட்டமிழக்க, அவரையடுத்து களமிறங்கிய அணித் தலைவர் மொஷ்ரபி மோர்டாசா 10 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.
இறுதியாக பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 249 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதன்மூலம் ஆப்கானிஸ்தான் அணிக்கு வெற்றியிலக்காக 250 ஓட்டம் நிர்ணயிக்கப்பட்டது. 
ஆடுகளத்தில் இம்ருல் கைஸ் 72 ஓட்டத்துடனும், மெய்டி ஹசான் 5 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர். பந்து வீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சார்பில் அத்தாப் ஆலம் 3 விக்கெட்டினையும், முஜிபுர் ரஹ்மான் மற்றும் ரஷித் கான் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர். 

ad

ad