புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 செப்., 2018

சென்னையில் சிறப்பு நீதிமன்றம்.... 'கிலி'யில் 75 குற்றப் பின்னணி எம்.எல்.ஏ-க்கள்!


சென்னையில் சிறப்பு நீதிமன்றம்.... 'கிலி'யில் 75 குற்றப் பின்னணி எம்.எல்.ஏ-க்கள்!.  
 
 
MLA

`தண்டனை பெற்ற மக்கள் பிரதிநிதிகளுக்குத் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க வேண்டும்’ என வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யா பொதுநல வழக்கு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டில் போட்டார். நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவீன் சின்கா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு, இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, `குற்றப் பின்னணி கொண்ட எம்.பி., எம்.எல்.ஏ-களை விசாரிக்கச் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும்’ எனக் கடந்த ஆண்டு நவம்பரில் உத்தரவிட்டது. இதன்பிறகு இந்த வழக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விசாரணைக்கு வந்தபோது `குற்றப் பின்னணி மக்கள் பிரதிநிதிகள் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்க 12 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும். இதில் இரண்டு நீதிமன்றங்கள் 228 எம்.பி-க்கள் தொடர்பான ஊழல் வழக்குகளை விசாரிக்கும். 65-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்கள் மீது ஊழல் வழக்குகள் உள்ள தமிழ்நாடு, ஆந்திரா, பீகார், கர்நாடகா, கேரளா, மத்தியபிரதேசம், மராட்டியம், தெலங்கானா, உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய 10 மாநிலங்களில் தலா ஒரு சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும். இந்தச் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க 7.80 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.' என மத்திய அரசு தெரிவித்தது.

`நீண்ட காலமாக எம்.பி மற்றும் எம்.எல்.ஏ-கள் மீது நிலுவையில் உள்ள 1,581 வழக்குகளை இந்தச் சிறப்பு நீதிமன்றங்கள் ஓர் ஆண்டுக்குள் விசாரித்துத் தீர்ப்பு அளிக்க வேண்டும். இந்தச் சிறப்பு நீதிமன்றங்கள் மார்ச் 1-ம் தேதி முதல் செயல்பட வேண்டும்' என சுப்ரீம் கோர்ட் டிசம்பரில் உத்தரவு போட்டது.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ-கள் 28 பேர் மீதும் தி.மு.க. எம்.எல்.ஏ-கள் 42 பேர் மீதும் குற்ற வழக்குகள் இருக்கின்றன. மாவட்டங்களில் மந்த கதியில் நடைபெறும் இந்த வழக்குகள் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டால் விரைந்து முடிக்கப்படும். அதனால், சிறப்பு நீதிமன்றத்தை அமைக்காமல் காலம் தாழ்த்தி வந்தது தமிழக அரசு. மற்ற மாநிலங்களிலும் தனி நீதிமன்றங்கள் அமைப்பதிலும் வழக்குகளை ஒதுக்குவதிலும் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் வழக்கு மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் பிரமாணபத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்தது. அதில், `மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்குகளை விசாரிக்க 11 மாநிலங்களில் 12 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தின் அந்தஸ்து குறிப்பிடப்படவில்லை' எனத் தெரிவித்திருக்கிறது. `சிறப்பு நீதிமன்றத்துக்கு 1,233 வழக்குகள் மாற்றப்பட்டுள்ளன. இதில் 136 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன. 1,097 வழக்குகள் நிலுவையில் உள்ளன’ எனவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ad

ad