அம்மா மக்கள் முன்னேற்றக் கழக
துணைப் பொதுச்செயலாளரும், சசிகலாவின் உறவினருமான டி.டி.வி.
தினகரன் ஒருபக்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி மறுபக்கம் என இருவரும் இரட்டைக் குழல் துப்பாக்கி போன்று, ஆளும் அ.தி.மு.க-வுக்கு சட்ட ரீதியாக நெருக்கடிகளைக் கொடுத்து வருகின்றனர்.
``அ.தி.மு.க-வில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகளை உருவாக்கியது செல்லாது; பொதுச்செயலாளர் பதவியை நீக்கியதும் செல்லாது, அடிப்படை உறுப்பினர்களால் பொதுச்செயலாளரை தேர்வு செய்து கட்சியை அவரிடம் ஒப்படைக்க வேண்டும்'' என்று கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார் கே.சி.பழனிசாமி. `இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்' என்று ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதுபோலவே, அ.தி.மு.க-வை ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்., நிர்வகிப்பது தவறு என்று வலியுறுத்தி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார் டி.டி.வி.தினகரன். அதே நேரத்தில் அவருடைய கட்சிப் பணிகளைத் தீவிரப்படுத்தி வருகிறார்.
மேலும், தமிழகம் முழுவதும் மாவட்டவாரியாகச் சுற்றுப்பயணம் மேற்கொள்வதுடன், அ.தி.மு.க-வில் அதிருப்தியில் இருப்பவர்களை அழைத்து தன் கட்சியில் சேர்த்து வருகிறார் டி.டி.வி.தினகரன். கட்சியைச் சுறுசுறுப்பாக வைத்துக்கொண்டு பொதுக்கூட்டங்கள், போராட்டங்கள் என அவர் நடத்தி வருவதைப் பொதுமக்களும் ஆர்வத்துடன் கவனிக்கிறார்கள். டி.டி.வி.தினகரன் முன்னிலையில் ஏராளமானோர் பல்வேறு ஊர்களிலிருந்தும் அவருடைய கட்சியில் சேர்ந்துவருவது சமீப காலமாக அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதற்கு அவர்கள், ``எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவைக்கூட உருப்படியாக அ.தி.மு.க சார்பில் நடத்தவில்லை. 8 மாதங்களுக்குமேல் ஆகியும் கட்சியில் புதிய உறுப்பினர் சேர்க்கையை நடத்தி முடிக்கவில்லை. 'ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வத்தையும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியையும் நியமனம் செய்த பொதுக்குழுவில் 15 பேர் கொண்ட வழிகாட்டும் குழு அமைக்கப்படும்' என்று சொன்னார்கள். ஆனால், அதுபோன்ற குழுவில் இதுவரை 4 பேர் மட்டுமே உள்ளனர். இன்னும், 11 பேர் நியமிக்கப்படவில்லை. அதைக்கூடச் செய்யாமல் இருக்கிறார்கள். வாரியப் பொறுப்புகளையும் மூத்த நிர்வாகிகளுக்குக் கொடுக்காமல் தட்டிக் கழிக்கிறார்கள்'' என்று குறிப்பிட்டனர்.
கட்சியினரின் உள்ளக் குமுறல்களை சரிக்கட்டும் வகையில் அ.தி.மு.க. தலைமை
அலுவலகத்தில் வியாழனன்று (செப்டம்பர் 13) கட்சியின் உயர்மட்டக்குழு
கூட்டத்தைக் கூட்டினர். ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை
ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர்கள்
வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி, அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி, தங்கமணி
மற்றும் நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர். அதில், கட்சி வழிகாட்டும்
குழுவுக்குப் பொறுப்பாளர்களை நியமனம் செய்வது குறித்து ஆலோசனை
நடத்தப்பட்டது. அதோடு, டெல்லி உயர் நீதிமன்றத்தில் அ.தி.மு.க-வுக்கு எதிராக
நடக்கும் வழக்குகளை எதிர்கொள்வது குறித்தும் ஆலோசனை நடத்தினர். எம்.ஜி.ஆர்
நூற்றாண்டு நிறைவு விழா, கட்சியில் உறுப்பினர்
சேர்க்கையைத் துரிதப்படுத்துவது ஆகியவை குறித்துப் பேசிய அ.தி.மு.க.
நிர்வாகிகள், மாவட்டந்தோறும் கட்சிப் பொறுப்புக்கு சீனியர்களையும்,
அதிருப்தியில் இருப்பவர்களையும் நியமிக்க முடிவு செய்தனர். அதற்கான
அறிவிப்பை உடனே வெளியிட்டனர்.
அமைப்புச் செயலாளர்களாக முன்னாள் அமைச்சர் விழுப்புரம் ப. மோகன்,
முன்னாள் எம்.எல்.ஏ நெல்லை முருகையா பாண்டியன், தூத்துக்குடி
என்.சின்னத்துரை, செஞ்சி ராமச்சந்திரன், திருச்சி எம்.பரஞ்சோதி ஆகியோர்
நிமிக்கப்பட்டனர். கட்சியின் கொள்கைபரப்பு துணைச் செயலாளர்களாக
செ.ம.வேலுசாமி, பு.தா. இளங்கோவன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல்
பிரிவு துணைச் செயலாளர்களாக ஐ.எஸ்.இன்பதுரை எம்.எல்.ஏ,
நியமிக்கப்பட்டுள்ளார். வர்த்தக அணி செயலாளராக சிந்து கே.ரவிச்சந்திரன்
நியமிக்கப்பட்டுள்ளார். கலைப்பிரிவு செயலாளராக ஆர்.வி.உதயகுமாரும், இணைச்
செயலாளராக நாஞ்சில் பி.சி.அன்பழகனும், செய்தித் தொடர்பாளர்களாக நிர்மலா
பெரியசாமி, திரைப்பட இயக்குநர் லியாகத் அலிகான் ஆகியோரும்
நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
இப்படி, அ.தி.மு.க-வில் தற்போது நியமிக்கப்பட்டுள்ள புதிய நிர்வாகிகளில் 90 சதவிகிதம் பேர், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களாகவே இருப்பது, கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. புதிய நிர்வாகிகள் பட்டியலைப் பார்த்ததும் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியடைந்தனர். தாங்கள் முழுமையாக ஓரங்கட்டப்பட்டு விட்டதாக அவர்கள் கருதுகிறார்கள். இவை எல்லாவற்றுக்கும் மேலாக, குட்கா வழக்கில் சி.பி.ஐ ரெய்டுக்கு உள்ளான முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா-வுக்கு அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டிருப்பது ஓ.பி.எஸ் ஆதரவாளர்களை மேலும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. மேலும், திருச்சி மருத்துவர் ராணி அளித்த திருமண மோசடி புகாரில் சிக்கிய முன்னாள் அமைச்சர் பரஞ்சோதிக்கும், வேளாண் அதிகாரி முத்துக்குமாரசுவாமி தற்கொலையில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கும் பதவி வழங்கப்பட்டிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
புதிய நிர்வாகிகள் நியமனம், அ.தி.மு.க-வில் புயலையும், புகைந்துகொண்டிருந்த அதிருப்தியையும் வெளியே கிளப்பிக்கொண்டு வந்துள்ளது.