புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 செப்., 2018

வடக்கு, கிழக்கில் பொதுவாக்கெடுப்பு கோரும் தீர்மானம் இன்று!

தமிழ் மக்­க­ளின் வேண­வா­வைத் தீர்­மா­னிப்பதற்கு, இலங்­கை­யில் வடக்கு மற்­றும் கிழக்கு மாகா­ணங்­க­ளில் ஐ.நா. சபை­யின் கண்­கா­ணிப்­பு­டன் பொது வாக்­கெ­டுப்பு நடத்­தப்­ப­ட­ வேண்­டும் என்­பது உள்­ளிட்ட 5 தீர்­மான வரை­வு­க­ளும் செம்­மைப்­ப­டுத்­தப்­பட்டு வடக்கு மாகாண சபையின் இன்­றைய அமர்­வில் விவா­தத்­துக்கு எடுத்­துக் கொள்­ளப்­பட்டு நிறை­வேற்­றப்­ப­ட­ வுள்­ளது.

வடக்கு மாகா­ண­சபை உறுப்­பி­னர் எம்.கே.சிவா­ஜி­லிங்­கத்­தால் கடந்த அமர்­வில், வட­கி­ழக்­கில் பொது வாக்­கெ­டுப்பு, இலங்­கையை பன்­னாட்­டுக் குற்­ற­வி­யல் நீதி­மன் றில் நிறுத்­தல், இலங்கை மீது இரா­ணு­வத் தடை விதித்­தல் உள்­ளிட்ட விட­யங்­களை உள்­ள­டக்­கிய 5 தீர்­மான வரைவு சமர்­ப்பிக்­கப்­பட்­டி­ருந்­தது.

சபை­யால் தீர்­மான வரைவு ஏற்­றுக் கொள்­ளப்­பட்­டி­ருந்­த­போ­தும், அத­னைச் செம்­மைப்­ப­டுத்­த­வேண்­டும் என்ற கோரிக்கை முன்­வைக்­கப்­பட்­டது. தீர்­மான வரை­வைச் சமர்­பித்த சிவா­ஜி­லிங்­க­மும் அதற்கு இணங்­கி­னார்.

தீர்­மான வரை­வைச் செம்­மைப்­ப­டுத்த 6 பேர் கொண்ட குழு நிய­மிக்­கப்­பட்­டது. இந்­தக் குழு­வால் தீர்­மான வரைவு செம்­மைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. வடக்கு மாகாண சபை­யின் 131ஆவது அமர்வு இன்று நடை­பெ­ற­வுள்­ளது. இந்த அமர்­வில் செம்­மைப்­ப­டுத்­தப்­பட்ட தீர்­மான வரைவு நிறை­வேற்­றப் ப­டும் என்று தெரி­ய­வ­ரு­கின்­றது.

ad

ad