03.04.2019 - புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் தேர்த்திருவிழா www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

திங்கள், செப்டம்பர் 03, 2018

துரோகிகளுடன்தான் தற்போது எமது கட்சியினர் கூட்டு வைத்துள்ளனர்;விக்­கி­னேஸ்­வரன்


முன்னர் அர­சாங்கம் தரு­வதை ஏற்று எங்கள் இடங்­களை நாங்கள் அபி­வி­ருத்தி செய்ய வேண்டும் என்று சில தமிழ்க் கட்சித் தலை­வர்கள் கூறிய போது அதனை எதிர்த்­த­வர்கள் எமது கட்­சி­யினர் தான். அவர்­களைத் துரோ­கிகள் என்று அழைத்­த­வர்­களும் அவர்கள் தான்.

அந்தத் துரோ­கி­க­ளுடன் தான் இப்­போது எமது கட்­சி­யினர் உள்­ளூ­ராட்சி சபைகள் பல­வற்றில் கூட்டு வைத்­துள்­ளனர் என்று வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார்.

என்னைப் பொறுத்த வரையில் கட்சி அர­சியல் ஒரு பொருட்­டல்ல. எவ்­வ­ளவு வேக­மாக ஒரு அர­சியல் தீர்வைப் பெற்றுத் தர­மு­டியும் என்­பதே எனது கரி­சனை.

நாங்கள் யாவரும் ஒன்­றி­ணைந்து இரா­ணு­வத்­தி­ன­ருடன் சேர்ந்த தெற்­கத்­தையப் பெரும்­பான்­மை­யி­னரின் செய­லணி ஒரு அர­சியல் செயற்­பாடே என்று கூறி எமக்கு அர­சியல் தீர்வே தற்­போது முக்­கி­ய­மென்ற கருத்தை முன்­வைத்­தி­ருந்தால் தமிழ் மக்­களின் அர­சியல் பல­மற்ற நிலையும் தமிழ் மக்­களின் உரித்­துக்­களை வழங்க அர­சாங்கம் பின்­னிற்கும் பாங்கும் வெளிக் கொண்டு வரப்­பட்­டி­ருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.