புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 நவ., 2018

ஒத்திவைத்த பரீட்சைகளை மாவீரர் நாளன்று நடத்த ஆளுநர் அலுவலகம் அறிவிப்பு

வடக்கு மாகாணப் பாடசாலைகளில் நேற்று நடைபெற இருந்த பரீட்சைகள் அனைத்தும் மாகாணம் முழுவதும் ஒத்தி
வைக்கப்பட்டிருக்கின்ற நிலையில், இப்பரீட்சைகள் அனைத்தும் எதிர்வரும் 27ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சத்தியசீலன் தெரிவித்துள்ளார்.

அன்றையதினம் மாவீரர் எழுச்சி நாளாக தமிழர் தாயகம் மற்றும் புலம்பெயர் தேசமெங்கும் அனுஸ்டிக்கப்படும் நிலையில் ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகளை நடத்த மாகாணக் கல்வி அமைச்சு நடவடிக்கைகள் எடுத்துள்ளமை திட்டமிட்ட தமிழர் விரோத செயல் என குறிப்பிடப்பட்டள்ளது.

வடக்கு மாகாணசைபை கலைக்கபட்டுள்ள நிலையில் வடக்கு மாகாண ஆளுநரின் அறிவுறுத்தலிற்கு அமைவாகவே அனைத்து நிர்வாகங்களும் வடக்கில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

கஜா புயலின் தாக்கம் காரணமாக, வடக்கு மாகாண ஆளுநரின் பணிப்புரைக்கமைய, நேற்று சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. இவ் விடுமுறை கூட நேற்று பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பிற்பாடே அறிவிக்கப்பட்டு மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அசௌகரியங்களை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ad

ad