வியாழன், ஜூலை 04, 2019

குனிந்து, கும்பிட்டு பதவி : செந்தில் பாலாஜி பேச்சால் சட்டசபையில் கூச்சல்

குனிந்து, கும்பிட்டு பதவி : செந்தில் பாலாஜி பேச்சால் சட்டசபையில் கூச்சல் குனிந்து கும்பிட்டு பதவி என சட்டசபையில் செந்தில் பாலாஜி பேசியதால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.


மின்துறை மானியக் கோரிக்கையின்போது திமுக சார்பில் செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ பேசினார். அப்போது குனிந்து, கும்பிட்டு ஸ்டாலின் பதவி வாங்கவில்லை என பேசினார். முதலமைச்சர் குறித்து செந்தில்பாலாஜி தெரிவித்த கருத்தால் அவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.


இதற்கு பதில் அளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி எங்களை தொடர்புபடுத்தி பேசுவது தவறு என கூறினார்.

மு.க.ஸ்டாலின் பேசும்போது, தவறு இருந்தால் அமைச்சர்கள் தலையிடலாம். ஓபிஎஸ் இதற்க்கு முன் பேசியதை பேசினால் என்னவாகும் என்றார்.

இதற்கு பதில் அளித்த துணை முதல்வர் ஓபன்னீர்செல்வம், நான் தொடங்கியது தர்மயுத்தம். எத்தனை முறை ஜெயலலிதாவிடம் செந்தில் பாலாஜி குனிந்தார் என தெரியுமா? என்று கூறினார்.

தொடர்ந்து முதல்வர் பழனிசாமி, தற்போது உள்ள கட்சிக்காவது செந்தில் பாலாஜி விசுவாசமாக இருக்க வேண்டும் என கூறினார்.