வெள்ளி, ஜூலை 05, 2019

மாத்தறை- ஹம்பாந்தோட்டை அதிவேக நெடுஞ்சாலை பணிகள் ஆரம்பம்!

டைநிறுத்தப்பட்டிருந்த மாத்தறை- ஹம்பாந்தோட்டை அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகளை, மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகளை முன்னெடுத்துவரும் சீன நிறுவனத்துக்கும், பெருந்தெருக்கள் அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில், இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே, இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகளுக்கான 10 மாதக் கொடுப்பனவை அரசாங்கம் வழங்காமையின் காரணமாக, பணிகளை இடைநிறுத்த சீன கட்டுமாண நிறுவனம் நேற்று முன்தினம் (03) நடவடிக்கை எடுத்திருந்தது