புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

5 ஜூலை, 2019

வடக்கு அரச ஊழியர்களுக்கு ஆளுநர் கடும் எச்சரிக்கை

வடக்கு மாகாணத்தில் உள்ள அரச உத்தியோகத்தர்கள், அலுவலக நேரங்களில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டால், உடனடியாக அவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் எச்சரித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தில் உள்ள அரச உத்தியோகத்தர்கள், அலுவலக நேரங்களில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டால், உடனடியாக அவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் எச்சரித்துள்ளார்.

வடக்கு மாகாண நிர்வாகப்பிரிவின் கீழுள்ள அரச உத்தியோகத்தர்கள், அலுவலக நேரங்களில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது தொடர்பான விசாரணைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு, ஆளுநர் சார்பாக பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

வடக்கு மாகாண விவசாய திணைக்களத்தின் பிரச்சினைகள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளரை ஆளுநர் நியமித்துள்ளதாகவும் அவருக்கு கிடைக்கப்பெற்ற விசாரணை அறிக்கையில் பெயரிடப்பட்டுள்ளவர்களின் மீது நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த திணைக்களத்தின் பெண் ஊழியர் மீதான வன்முறை சம்பவத்திற்கு வடமாகாண ஆளுநர் தனது கண்டனங்களை வெளியிட்டுள்ளதுடன், இதுபோன்ற சம்பவங்கள் வடமாகாணத்தில் மேலும் நடைபெறாமல் இருக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளதாகவும் வடமாகாண ஆளுநர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.

மேலும் ஆர்ப்பாட்டங்கள், பணிப்பகிஷ்கரிப்புகள் நடத்துவதன் மூலம் தன்மீது யாரும் அழுத்தங்களை பிரயோகிக்க முடியாது என வடக்கு ஆளுநர் தெரிவித்துள்ளார்.