புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஏப்., 2013


ராமதாஸ் கைது எதிரொலி : கிருஷ்ணகிரியில் பஸ் எரிப்பு
பாமக நிறுவனர் ராமதாஸ் கைதை கண்டித்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள வித்யாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அருகாமையில் அரசு பேருந்தை வழிமறித்து பயணிகளை இறக்கிவிட்டு, தீ வைத்து கொளுத்தப்பட்டது. இச்சம்பவத்தில் அரசு பேருந்து முழுமையாக எரிந்தது.   பேருந்துக்கு தீ வைத்தவர்களை பிடிக்க இன்ஸ் பெக்டர் சிவலிங்கம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

பாமக கொடிகள் சேதம்- சாலைமறியல் செய்தவர்களிடம்
டி.எஸ்.பி சமாதானம் ( படங்கள் )
 


திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த பாதிரி கிராம கூட்ரோட்டில் உள்ள பாமக கொடி கம்பத்தில் இருந்த கொடியில் அசிங்கம் ஏற்படுத்தியதாக கூறி காஞ்சிபுரம் சாலையில் அக்கிராம பாமகவினர் மறியலில் ஈடுபட்டனர்.

அதேபோல் மும்முனி கிராமத்தில் பாமக கொடியை சேதப்படுத்தியதை கண்டித்து செய்யாறு பைபாஸ் சாலையிலும் மறியல் போராட்டம் நடந்தது. இதனால் வந்தவாசி பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பாமகவினர் நடத்திய சாலை மறியல் போராட்டத்தால் வந்தவாசி சுற்றுவட்டாரப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் எஸ்பி முத்தரசி தலைமையில் அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


நடிகர் வையாபுரி குடும்பத்தினருடன் ஜெயலலிதாவை சந்தித்தார் 
நடிகர் வையாபுரி தனது குடும்பத்தினருடன் இன்று தமிழ்நாடு தலைமைச்செயலகத்தில் முதல்வர் ஜெயல லிதாவை சந்தித்தார்.  அப்போது அவர்,  தனது மகன் வி.ஷ்ரவன் உபநயன நிகழ்ச்சிக்கு வருகை தந்து வாழ்த்துமாறு அழைப்பிதழ் கொடுத்து கேட்டுக்கொண்டார்.


காடுவெட்டி சென்னையில் கைது
பாமக சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி ஜெ.குரு சென்னையில் கைது செய்யப்பட்டார்.  திருவல்லிக் கேணியில் உள்ள சட்டமன்ற விடுதியில் ஜெ.குருவை கைது செய்தது போலீஸ்.

மாமல்லபுரம் வன்னிய சித்திரை முழுநாள் இரவு விழாவில் அனுமதித்த நேரத்திற்கு மேலாக பேசியதன் புகாரின் அடிப்படையில் போலீசார் இந்த கைது நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

ராமதாசுக்கு 15 நாள் சிறை : கைதுக்கான ஆவணங்களில் கையெழுத்திட்டார்
மரக்காணம் கலவரம் தொடர்பாக விசாரனை கோரி விழுப்புரத்தில்  ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றார் ராமதாஸ்.  காவல்துறையின் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பாமக நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட அவர் விழுப்புரத்தில் ஒரு மண்டபத்தில் தங்கவைக்ப்பட்டார்.  இந்நிலையில் அவர் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்படுகிறார். 
இதையடுத்து  ராமசாசிடம் விழுப்புரம் போலீசார், நீதிமன்ற கைதுக்கான ஆவணங்களில் கையெழுத்து வாங் கிக்கொண்டுள்ளனர்.


ராமதாஸ் கைது எதிரொலி : செஞ்சியில் 5 பேருந்துகள் உடைப்பு - சாலைமறியல்
பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று கைது செய்யப்பட்டு, 15 நாள் நீதிமன்றக்காவலில் வைக்கப்படுகிறார்.   காவல்துறையின் தடையை மீறி விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றதால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து பாமகவினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.  செஞ்சியில் 5 பேருந்துகளை அடித்து உடைத்துள்ளனர்.   மேலும் செஞ்சியில் சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் 500க்கும் அதிகமான பாமகவினர் கைது 
திருப்பத்தூர், நாட்டராம்பள்ளி, ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, அணைக்கட்டு, வேலூர், ஆற்காடு, வாலாஜா, அரக்கோணம் போன்ற பகுதிகளில் பாமக நிறுவனர் ராமதாஸ் கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.   அவர்களில் 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு 15 நாள் நீதிமன்ற காவலில் வைக் கப்பட்டுள்ளனர்.

ராமதாசை எந்த சிறைக்கு கொண்டு செல்வது? :
காவல்துறை திணறல்
மரக்காணம் கலவரம் தொடர்பாக விசாரனை கோரி விழுப்புரத்தில்  ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றார் ராமதாஸ்.  காவல்துறையின் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று காலை கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட அவர் விழுப்புரத்தில் ஒரு மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டார்.  இந்நிலையில் அவர் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்படுகிறார்.  
இதையடுத்து  ராமசாசிடம் விழுப்புரம் போலீசார், நீதிமன்ற கைதுக்கான ஆவணங்களில் கையெழுத்து வாங்கிக்கொண்டுள்ளனர்.
விழுப்புரம் மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள அவரை எந்த சிறைக்கு கொன்டு செல்வது என்பதில் குழப்பம் நீடிக்கிறது.  வட தமிழகம் முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டு ஆயிரக்கணக்காணோர் கைதாகி யுள்ளனர்.  இதனால் வடதமிழகத்தில் பதட்டம் நீடிக்கிறது.
இந்த நிலையில் ராமதாசை எந்த வித அசம்பாவிதமும் இல்லாமல் எந்த சிறைக்கு கொண்டு செல்வது என்பதில் போலீசார் திணறி வருகின்றனர்.


மதுரை சிறையில் ராமதாசை அடைக்க திட்டம் ?
காவல்துறையின் தடையை மீறி விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பாமக நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டு 15 நாள் சிறையில் அடைக்கப்படுகிறார்.
வடமாவட்டங்களில் வன்னியர்கள் அதிகமாக இருப்பதால் தென்மாவட்டத்தில் குறிப்பாக மதுரை சிறையில் அடைக்க முடிவு செய்து இருப்பதாக தகவல் தெரிகிறது.  
தென்மாவட்டத்தில் அடைத்தால் பதட்டம் குறையும் என்று முடிவெடுத்து மதுரை சிறையில் அடைக்க விருப்பதாக காவல்துறை வட்டாரத்தில் இருந்து கசிகிறது.
ராமதாஸ் கைதினால் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை பற்றிய மேலதிக செய்திகளுக்கு எம் இணைய தளத்தோடு இணைந்திருங்கள் 


ராமதாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு - விபரம்!
 

பாமக நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டு 15 நாள் சிறையில் வைக்கப்படுகிறார்.  அவர் கைது செய்யப்பட்டதற்கான வழக்கு விபரம் :
143, 188,சி.எல்.ஏ.7(1) (a) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவை பொதுமக்களுக்கு தொந்தரவு தருதல், சட்டவிரோதமாக கூட்டம் நடத்துதல், காவல்துறை தடையை மீறுதல் போன்ற சட்டப்பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
வழக்கறிஞர்கள் மூன்று நாட்களுக்கு பின் ஜாமீனில் வெளிவர வாய்ப்பு உள்ளது என குறிப்பிடுகின்றனர்.   நாளை மே -1 என்பதால் அரசு விடுமுறை.  அதனால் நாளை ஜாமீன் வாங்க முடியாது. நாளை மறுதினம் தான் பாமக வழக்கறிஞர்கள் ஜாமீன் மனு தாக்கல் செய்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

தடைமீறு - பாமகவினருக்கு ராமதாஸ் உத்தரவு
கடந்த 25 ந்தேதி பாமக மாமல்லபுரத்தில் சித்திரை நாள் குடும்ப விழா கூட்டம் நடத்தியது. இதில் கலந்துக்கொள்ள பாமகவினர் கிழக்கு கடற்கரை சாலையில் செல்லும் போது மரக்காணத்தில் பாமகவினருக்கும் விடுதலை சிறுத்தைகள் அமைப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கலவரமாக மாறியது. இதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
ராமதாஸ் கைது எதிரொலி : விழுப்புரத்தில் 144 தடை உத்தரவு
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் சம்பத் பிறப்பித்த உத்தரவில், ராமதாஸ் கைதை தொடர்ந்து பா.ம.க.,வினர் போராட்டத்தை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிற்ப்பிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

ராமதாசுக்கு 15 நாள் சிறை : வேலூர் சிறையில் அடைக்க முடிவு

மரக்காணம் கலவரம் தொடர்பாக விசாரனை கோரி விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றார் ராமதாஸ். காவல்துறையின் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (30.4.2013)காலை கைது செய்யப்பட்டார்.

மிழீழ விடுதலைப் புலிகளினால் கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் பொலிஸார் செயற்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் திருகோணமலை ஹோமரங்கடவல பம்புருகஸ்வௌ பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றது.

சம்பளம் கேட்டமைக்காக கொதிக்கும் எண்ணெய் ஊற்றப்பட்டு கையில் படுகாயங்களுடன் சவூதி அரேபியாவிலிருந்து இலங்கைப் பணிப்பெண் ஒருவர் நாடு திரும்பியுள்ளார்.
புத்தளம் பாலாவி பகுதியைச் சேர்ந்த லட்சுமி (38) எனும் மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறான கையில் எரிகாயங்களுடன் நாடு திரும்பியவராவார்.

தயா மாஸ்டர் தேர்தலில் போட்டியிடுகின்றார் என்பதை கேட்டாலே மக்கள் சிரிக்கின்றனர்: ஐ.தே.க.
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடக ஒருங்கிணைப்பாளராக இருந்த தயா மாஸ்டர் எனும் வேலாயுதம் தயாநிதி எதிர்வரும் வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவார் என பரவலாக பேசப்பட்டு வருகின்றது.

இணையத்தளங்களை ஊடறுக்க மென்பொருள் வழங்கிய நபர் கைது
இணையத்தளங்களை ஊடறுப்பதற்கு மென்பொருள் வழங்கிய நபர் ஒருவரை புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

பாலியல் குற்றச்சாட்டு!- காத்தான்குடி நகர சபை உறுப்பினருக்கு விளக்கமறியல்
சட்டத்தரணி மூலம் இன்று நீதிமன்றில் சரணடைந்த காத்தான்குடி நகரசபை உறுப்பினர் எச்.எம்.பாக்கீரை எதிர்வரும் மே 8ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஓடும் ரயில் முன் பாய்ந்து தமிழர் ஒருவர் உயிரிழப்பு! கொழும்பு, கொம்பனித்தெருவில் சம்பவம்
ஓடும் ரயிலில் பாய்ந்து தமிழர் ஒருவர் கொழும்பு கொம்பனித் தெருவில் உயிரிழந்துள்ளார்.

ad

ad