புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 டிச., 2013

ஈழக்கனவை பெற்றுக்கொடுப்பதே யசூஷி போன்றோரது நோக்கம்: குணதாச

புலிகள் முப்பது வருடங்கள் ஆயுதப் போராட்டம் நடத்தி பெற்றுக்கொள்ள முடியாமல் போன தமிழீழ கனவை நிறைவேற்ற வேண்டுமென்ற முனைப்புடன் இன்று பலர் செயற்பட்டு வருகின்றனர். ஜப்பானின் விசேட சமாதான தூதுவர் யசூஷி அகாஷியின் செயற்பாடுகளும்

பொன் கலசமொன்றை 35 கோடி ரூபாவுக்கு விற்பனை செய்ய முயன்றவர்கள் கைது

கோடி ரூபாவுக்கு விற்பனை செய்ய முயன்ற ஓய்வு பெற்ற இராணுவ லெப்டினல் கேர்ணலொருவரையும் பிறிதொரு நபரையும் பயங்கரவாத விசாரணைப் பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கண்ணீர் மழையுடன் ஆபிரிக்க தந்தை நெல்சன் மண்டேலாவின் உடல் நல்லடக்கம்!
மறைந்த தென்னாபிரிக்க தந்தையும், முன்னாள் ஜனாதிபதியுமான நெல்சன் மண்டேலா உடல் இன்று அவரது சொந்த கிராமத்தில் அவரது வீட்டின் அருகே அரச மரியாதையோடு நல்லடக்கம் செய்யப்பட்டது.
புங்குடுதீவு மடத்துவெளி முருகன் ஆலயத்துக்கு அண்மையில் கடற்படையினாரல் கொல்லப்பட்ட இளையதம்பி தர்சினி நினைவு தினம் 

                                                       நினைவஞ்சலி 

                                அமரர் இளையதம்பி தர்சினி  
                                   மடத்துவெளி, புங்குடுதீவு 


8ம் ஆண்டு நினைவு நாள் 16-12-2013 வருடங்கள் பல சென்றாலும் நீங்கவில்லை உன் நினைவுகள் துடிக்கிறது எம் உள்ளம் உன் பெயா் ஒலிக்கும் போது ஒரு கணம் துடிக்க- மறுக்கிறது எம் இதயம் தமிழனாய் பிறந்தது நீ செய்த பாவம் உனைபிரிந்து தனிமையில் வாடுவதே நான் செய்த பாவம் மறு ஜென்மம் ஒன்றிருந்தாள் தோளில் சுமந்த உன்னை கருவில் சுமக்கும் வரம் கேட்பேன் அன்னாரின் ஆத்மா சந்தியடைய வயலுார் முருகனை பிரார்த்திப்போம்  - சிற்றம்பலம் எக்ஷனா 
பேரறிவாளன் உட்பட 14 பேரின் கருணை மனு மீது ஜனவரியில் தீர்ப்பு: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சதாசிவம்
பேரறிவாளன் உள்ளிட்ட 14 பேரின் கருணை மனுக்கள் மீதான விசாரணை முடிந்து விட்டதாகவும், அடுத்த மாதம் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் - பாஜகவுடன் கூட்டணி இல்லை: கலைஞர் திட்டவட்டம
 
 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் - பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று திமுக தலைவர் கலைஞர் கூறியுள்ளார். 15.12.2013 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவு
பொருளாதாரத் தடையா? போர்க்குற்ற விசாரணையா?
ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவையின் அடுத்த மார்ச் மாத அமர்வு குறித்து கலக்கத்தில் உள்ள அரசாங்கத்துக்கு, எதிர்க்கட்சிகளும் பேதியைக் கொடுக்கத் தொடங்கியுள்ளன.கடந்த வாரம், நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஐ.தே.க. உறுப்பினர் சஜித் பிரேமதாஸ, இலங்கைக்கு
முல்லை. கடலில் பிதிர்கடன் நிறைவேற்ற சென்ற குடும்பஸ்தரை கடல்சுழி இழுத்துச் சென்றது
உறவினர் ஒருவரின் பிதிர்கடனை நிறைவேற்ற கடலுக்கு சென்ற குடும்பஸ்தர் கடலின் சுழியால் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் காணாமல் போயுள்ளார்.
வடக்கில் விமானங்கள் பறக்க தடை விதிக்குமாறு ஐ.நா.விடம் தமிழ்க் கூட்டமைப்பு கோரவுள்ளது! சிங்கள இணையத்தளம் தகவல்
எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவா மனித உரிமைக் கூட்டத்தொடருக்கு முன்னதாக வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறியை பதவி நீக்கம் செய்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையில் வாழும் தமிழர்களின் நிலைமை பரிதாபத்துக்குரியதாகவே உள்ளது!- ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
இலங்கையில் வாழும் தமிழர்களின் நிலைமையும் பரிதாபத்துக்குரியதாகவே உள்ளது. அவர்களுக்கு தேவையான அனைத்து உரிமைகளும் கிடைக்க எங்கள் வாழும் கலை இயக்கம் இயன்றதை செய்யும். இவ்வாறு  வாழும் கலை மையத்தின் நிறுவனரும் ஆன்மிகவாதியுமான
இன்று நடைபெற்ற தாய்மண் உள்ளரங்க உதை பந்தாட்டச் சுற்றுப் போட்டியில் வெற்றி பெற்றதனால் யங் ஸ்டார் கழகம் தொடராக ஆறு தடவை வென்ற சாதனையை படைத்துள்ளது

இன்று நடைபெற்ற சுற்றுப் போட்டியில் இந்த  கழகம் எந்த அணியிடமும் தோற்காது மொத்தமாக 7 போட்டிகளில் பங்கு பற்றி 14 கோல்களை அடித்து 3 கோல்களை மட்டுமே வாங்கி அற்புதமாக விளையாடி தாய்மண் கிண்ணத்தை ஆறாவது தடவையாக தொடர்ந்து வென்று சாதனை படைத்துள்ளது .அரைக்கால் இறுதி, காலிறுதி ,அரையிறுதி, இறுதி

15 டிச., 2013

இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை:தயாராகிறது 
அமெரிக்கா! (சிறிலங்கா) இலங்கை அரசு தொடர்ந்தும் முரண்டுபிடிக்கும் வகையில் செயற்பட்டு வருவதால், அரசுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிப்பது தொடர்பான முனைப்புகளை அமெரிக்கா மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் அளவில் இலங்கைக்கு எதிரான இந்த பொருளாதார தடைகளை ஏற்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் இறுதிக்கட்டப் போரில் இடம்பெற்றதாக கூறப்படும் போர் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச நாடுகள் இலங்கை மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றன. இதனை விட இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் விசாரணைகளை நடத்தாது தன்னிச்சையாக செயற்பட்டு வருவது குறித்தே சர்வதேச சமூகம் தற்பொழுது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றன. பொதுநலவாய நாடுகள் அமைப்பு போன்ற சர்வதேச அமைப்பின் தலைமை பதவியை பெற்றுக்கொண்ட பின்னரும் சர்வதேச நிலைப்பாடுகளுக்கு மதிப்பளித்து அதனை செயற்படுவதற்கு பதிலாக ஒருதலைப்பட்சமாக சர்வாதிகார ரீதியில் இலங்கை செயற்பட்டு வருவது அமெரிக்க ராஜதந்திரிகளை கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது. இது தொடர்பில் கடும் நடவடிக்கையாக அமெரிக்கா இலங்கைக்கு எதிராக பொருளாதார தடையை விதித்து இலங்கை ஆட்சியாளர் உணரும்படியான அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டும் என்ற யோசனையை காங்கிரஸ் சபையில் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அமெரிக்க காங்கிரஸின் மனித உரிமை தொடர்பான உப குழுவே இந்த யோசனையை கொண்டு வரவுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறும் ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் மாநாட்டிற்கு பின் இந்த யோசனை காங்கிரஸ் சபையில் முன்வைக்கப்பட உள்ளதாக ராஜதந்திர வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன. அண்மைக் காலத்தில் உலகில் இடம்பெற்ற போர் குற்றங்கள் தொடர்பான அதிகமான சாட்சியங்கள் இலங்கையில் இடம்பெற்ற போர் குறித்தே வெளியாகியுள்ளன. இவற்றில் உண்மை உள்ளதா இல்லையா என்பதை அறிய விசாரணைகளை நடத்தி கண்டறியும் பொறுப்பு இலங்கை அரசாங்கத்திற்கு உள்ளது. விசாரணைகளை நடத்தாது தொடர்ந்தும் அதனை புறக்கணித்து வருவது ராஜதந்திரமான செயல் அல்ல எனவும் அமெரிக்க காங்கிரஸின் மனித உரிமை தொடர்பான உபகுழு தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் உத்தேச பொருளாதார தடைவிதிப்பில் இலங்கை மக்களுக்கு தேவையான உணவு, மருந்து போன்றவற்றை தவிர வேறு விடயங்கள் உள்ளடக்கப்படலாம் என கருதப்படுகிறது. குறிப்பாக இலங்கையில் இருக்கும் வெளிநாட்டு வங்கி கணக்குகளை தடைசெய்தல், வெளிநாட்டவர் இலங்கை செல்லவும், இலங்கையர் வெளிநாடுகளுக்கு செல்லவும் வீசா வழங்குவதை இடைநிறுத்துதல் அல்லது கட்டுப்பாடுகளை விதித்தல், எரிப்பெருள் இறக்குமதி கட்டுப்பாடு, இலங்கையின் ஏற்றுமதிகளை கட்டுப்படுத்துதல் போன்றவை இந்த பொருளாதார தடையில் உள்ளடக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் டுபாயில் இடம்பெற்ற பரபரப்பான இரண்டாவது இருபது-20 போட்டியில், இலங்கை அணி அபார வெற்றி பெற்றதோடு தொடர் 1-1 என சமநிலையானது.
 
ஐக்­கிய அரபு இராச்­சி­யத்­துக்கு கிரிக்கெட் சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்­டுள்ள இலங்கை அணியும் பாகிஸ்தான் அணியும் 2 இரு­பது-20, 5 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்­டிகள் கொண்ட தொடரில் மோதுகின்றன.
 
டுபாயில் இடம்பெற்ற முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றது. இந்நிலையில் இன்று இடம்பெற்ற தீர்க்கமான இரண்டாவது போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது.
 
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை மேற்கொள்ள தீர்மானித்தது.
 
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை

விஜய்-மோகன்லால் உயிர் தப்பினார்கள்

ஜில்லா’ படத்துக்காக கோவில் திருவிழா காட்சியை படமாக்கியபோது, திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. அதில் விஜய், மோகன்லால் இருவரும் உயிர் தப்பினார்கள். 5 பேர் காயம் அடைந்தார்கள்.
விஜய்-மோகன்லால் இணைந்து நடிக்க, சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி தயாரிக்கும் ‘ஜில்லா’ படத்தின் படப்பிடிப்பு உடுமலைப்பேட்டை அருகில் உள்ள திருமூர்த்தி அணைக்கட்டில் நடந்தது. அங்கு கோவில் திருவிழா காட்சிக்காக கோவில், தேர்,

பரீட்சை மண்டபத்திற்குள் முதலை

க.பொ.த சாதாரணதர பரீட்சை இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள தர்மபுரம் மகாவித்தியாலய மண்டபத்திற்குள் சுமார் ஐந்து அடி நீளமான முதலை ஒன்று உட்புகுந்தமையினால் மாணவர்க

நிரந்தர நியமனத்தை வழங்குமாறு கோரி யாழில் ஆர்ப்பாட்டம்

யாழ். போதனா வைத்­தி­ய­சா­லையில் கட­மை­யாற்­று­கின்ற சுகா­தாரத் தொண்­டர்கள் நிரந்­தர நிய­ம­னத்தை வழங்­கு­மாறு கோரி நேற்று கொட்டும் மழையில் ஆர்ப்­பாட்­ட த்தில் ஈடுபட்டதுடன் மனித உரிமை ஆணை­யா­ள­ருக்கும்


சோனியா, ராஜ்நாத் சிங்குக்கு அரவிந்த் கெஜ்ரிவால் எழுப்பியுள்ள 18 நிபந்தனை விபரம்!
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைப்பதற்கு காங்கிரஸ் ஆதரவு அளித்தது. இந்த ஆதரவை ஏற்பது பற்றி முடிவு செய்வதற்கு முன்பாக, தனது பிரச்சாரத்தின்போது முன்வைத்த வாக்குறுதிகள்

மத்தியில் நிலையான ஆட்சி அமைவது சந்தேகம்: ப.சிதம்பரம் கருத்து

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்கு பிறகு நிலையான ஆட்சி அமையும் என்பதை உறுதியாக கூறமுடியாது என்று மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 
குண்டு வைக்கப்போவது தெரிந்தால் கர்ப்பிணி மனைவியை அனுப்பி வைத்திருப்பேனா? குற்றம்சுமத்தப்பட்ட முருகனின் கருத்துக்கள்-விகடன் 

''ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் வாக்குமூலத்தை அப்படியே பதிவு செய்யவில்லை. திருத்தம் செய்தோம்'' என்று வழக்கு விசாரணை அதிகாரி தியாகராஜன் சொன்ன நிலையில்... 
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன்,
பிரதமர் பதவியில் இருந்து ஜயரத்ன நீக்கம் - புதிய பிரதமராக ஜீ.எல்.பீரிஸ் நியமனம்
பிரதமர் டி.எம். ஜயரத்னவை அந்த பதவியில் இருந்து நீக்கி விட்டு வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை பிரதமராக நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ள அரச வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ad

ad