புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 பிப்., 2017

தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

unnamed (4)பார்வதி.பார்வதிப் பிள்ளை.பார்வதி அம்மா.அண்ணையின் அம்மா.அன்னை.இப்படி ஒன்றுக்கு மேற்பட்ட அடைமொழிகளால் அழைக்கப்பட்ட தமிழ் ஈழத் தாய் எங்களைவிட்டுச் சென்றுவிட்டார். இவரது பிள்ளைகளில் ஒருவரான, தேசியத் தலைவர் பிரபாகரனின் தாயார் என்ற அறிமுகமே உலகம் முழுக்க இந்த வயதான பெண்ணை அடையாளம் காட்டுகிறது!
2009-ம் ஆண்டு வைகாசி மாதம் 16-ம் நாள் வட்டுவாகல் பாலத்தை வேலுப்பிள்ளையும் பார்வதி அம்மாவும் கடந்தார்கள். மெனிக்பாம் முகாமில் கண்ணீரும் கம்பலையுமாக நின்ற எம் மக்களைப் பார்த்து, ‘பிரபாகரனின் தந்தை நான்’ என்று வெண்கலக் குரலில் வேலுப்பிள்ளை சொன்னார். ‘நான்தான் அவர் அன்னை’ என்று மெல்லிய குரலால் சொன்னார் பார்வதி.
பரபரத்த இராணுவம், அவர்கள் இருவரையும் பனாகொடைக்கே கொண்டுபோய் ஏழு மாதங்கள் வைத்திருந்தது. எப்படி எல்லாம் அன்னையும் தந்தையும் துன்பம் அனுபவித்தனர் என்பதை அவர்கள் இருவர் மட்டுமே அறிவார்கள். அந்த சோகம்கூடச் சொல்ல முடியாமல் வேலுப்பிள்ளை மரணித்தார். அடுத்ததாக, இதோ அம்மாவும் சென்றுவிட்டார்.
வல்வெட்டித்துறை வல்லிபுரம் சின்னம்மா தம்பதியினரின் மகள், இந்தப் பார்வதி. சின்ன வயதில் இவரைக் ‘குயில்’ என்றுதான் கூப்பிடுவார்கள். 16 வயதில் வல்வெட்டித்துறை திருமேனியார் குடும்பத்தைச் சேர்ந்த திருவேங்கடம் வேலுப்பிள்ளையைத் திருமணம் செய்துகொண்டார்.
மூத்த மகன் மனோகரன், அடுத்த மகள் ஜெகதீஸ்வரி, இளைய மகள் விநோதினி ஆகிய மூவரையும் பெற்ற இந்தத் தம்பதியினர் அனுராதபுரம் புத்தளம் வீதியில் குடியிருந்தார்கள். அந்த வீட்டுக்குப் பக்கத்தில்தான் எல்லாளன் நினைவுத் தூபி இருக்கும். தூபியைச் சுற்றிய புல்வெளியில் ஐந்து வயதான மனோகரனும் நான்கு வயதான ஜெகதீஸ்வரியும் ஓடியாடி விளையாட, கைக்குழந்தையான விநோதினி அம்மா மடியில் தவழ்ந்துகொண்டு இருப்பார்.
எல்லா மாலை நேரங்களும் அவர்களுக்கு அப்படித்தான் கழியும். இந்த வேளையில்தான் புதிய கரு உண்டானது. ஈழத்தை ஆண்டதால் ஈழாளன் என்றும், அதுவே காலப்போக்கில் எல்லாளன் என்று மருவியதாகச் சொல்வார்கள். அந்த ஈழாளனின் வீரக் கதையை மற்ற பிள்ளைகளுக்கு பார்வதித் தாய் சொல்ல… கருவில் இருந்த குழந்தையும் கேட்டது. அந்தக் கரு… பிரபாகரனாக வளர எரு போட்டது பார்வதித் தாய்!
பார்வதிக்கு நெருக்கமான பெண்களில் ஒருவர் இராசம்மா. சிங்கள இனவாதக் கொடுமைகளை நேரடியாக அனுபவித்தவர் இந்த இராசம்மா என்ற ஆசிரியை. இவரது கணவரான ஆசிரியர் செல்லத்துரை, சிங்கள இனவெறியன் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கணவனை இழந்ததால் தான் பட்ட துன்பங்களையும் இதே மாதிரி தமிழர்கள் அனுபவிக்கும் தொல்லைகளையும் பார்வதியிடம் இராசம்மா சொல்ல… அதை சிறுவனாக இருந்த பிரபாகரன் காது கொடுத்துக் கேட்பார்.
பத்திரிகையாளர் அனிதா பிரதாப்புக்கு வழங்கிய பேட்டியில் பிரபாகரனே இந்த சம்பவத்தைக் குறிப் பிட்டு தன்னுடைய வாழ்க்கைப் பாதையைத் திருப்பிய சம்பவமாக இதையே குறிப்பிட்டார்.
வேலுப்பிள்ளையும் பார்வதியும் வல்வெட்டித்துறை ஆலடிப் பகுதியில் குடியிருந்தார்கள். அந்த வீட்டைத்தான் சிங்கள இராணுவம் இப்போது இடித்து

19 பிப்., 2017

படகு விபத்தில் 11 பேர் பலி

ளுத்துறை – கட்டுகுறுந்த கடற்பரப்பில் இடம்பெற்ற படகு விபத்தில் சிக்கிய 36 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

பேரவை செயலாளரிடம் விளக்கம் கேட்டுள்ளார் ஆளுநர்

Vidhyasagar rao
சட்டசபையில் நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெற்றி

முதல்வராக நீடிப்பாரா எடப்பாடி பழனிசாமி

 முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமி, தொடர்ந்து அந்தப் பதவியில் நீடிக்க இறைவன்தான்

இப்போது எம்.ஜி.ஆர் இருந்திருந்தால், ஒரு அலசல்

இப்போது எம்.ஜி.ஆர் இருந்திருந்தால், இப்படித்தான் அவர் நிலைமை இருந்திருக்கும். அ.தி.மு.க-

நடிகை பாவனாவை பலாத்காரம் செய்த கும்பல்! படம் பிடித்த வக்கிரம்!


‘நன்கறிந்த நடிகைதானே! அவரைப் பற்றி நமக்குத் தெரியாதா? அத்துமீறினால் என்ன செய்து விடுவார்?’ இப்படி ஒரு வக்கிரத்தோடு

ஆளுநருடன் ஒ.பி.எஸ். அணியினர் சந்திப்பு


தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுகவினர் சந்தித்தனர். பன்னீர்செல்வத்துடன் அதிமுக

ஐ.நா தீர்மானத்தில் மாற்றம் செய்யவேண்டாம்-சுமந்திரன்

திடீர் பயணம் மேற்கொண்டு ஜெனீவா சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் அங்கு நேற்று

மக்களிடம் கருத்து கேட்ட எம்.எல்.ஏ சசிகலா அணிக்கு ஆதரவு

சட்டசபையில் நடைப்பெற்ற நம்ப்பிக்கை வாக்கெடுப்பில் மக்களின் கருத்தைக் கேட்ட எம்.எல்.ஏ சசிகலா அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது

சசிகலா என்ன நாட்டுக்காக போராடிய தியாகியா.. கர்நாடக சிறை டிஜிபி காட்டம்!

சசிகலா நாட்டுக்காக போராடி சிறைக்கு வரவில்லை. அவர் மற்ற கைதிகளைப் போலவே நடத்தப்படுவார் என பெங்களூரு சிறைத்துறை

18 பிப்., 2017

பருத்தித்துறையில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ் நகரப் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


யாழ் நகரை சேர்ந்த செல்லக்கணபதிப்பிள்ளை சஞ்ஜீவ் என்ற 23 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

எடப்பாடி வென்றதாக சபாநாயகர் அறிவித்தாலும், இறுதி முடிவு ஆளுநர் எடுப்பது தான் – மீண்டும் வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடலாம்

சட்டசபையில் பெரும் அமளி மற்றும் எதிர்க்கட்சியினரை வெளியேற்றிவிட்டு நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி வென்றதாக

பட்டதாரிகள் நியமனத்திற்கு வட மாகாண அமைச்சர் வாரியம் அனுமதி

பட்டதாரிகள் நியமனத்திற்கு வட மாகாண அமைச்சர் வாரியம் அனுமதி வழங்கியுள்ளதற்கமைய குறித்த நியமனம் மார்ச்

தி.மு.கவினர் இல்லாமல் பெரும்பான்மையை நிரூபித்தால் செல்லுமா....? - என்ன சொல்கிறது சட்டம்!

முதல்வராகப் பதவியேற்றுள்ள எடப்பாடி பழனிசாமியிடம், தன் பெரும்பான்மையை நிரூபிக்கக்கோரி ஆளுநர்

122 பேர் ஆதரவு: பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை தக்கவைத்தார் எடப்பாடி பழனிச்சாமி


கடும் அமளியினால் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட அவை மீண்டும் 3 மணிக்கு கூடியது. எதிர்க்கட்சியினர் இல்லாமல்
122வாக்குகள்டைபெற்று எடை ப்பா டு பழனிசாமி வெற்றி பெற்றதாக   அறிவிக்கப்படுகிறது ஸ்டாப்களின்  கவர்னரை சந்திக்க  செல்கிறார் சடடசபை மீண்டும்  நம்பிக்கை   வாக்கெடுப்பு பணிகள்  ஆரம்பமாகியது 

திமுக உறுப்பினர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றம்!

சட்டசபையில் இருந்து திமுக உறுப்பினர்கள் சிலர், வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
சபாநாயகர் மைக் உடைப்பு: சபாநாயகர் இருக்கையில் திமுக எம்எல்ஏ



திமுக, காங்கரிஸ், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், ஒ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக உறுப்பினர்கள் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சபாநாயகருக்கு கோரிக்கை வைத்தனர். ரகசிய வாக்கெடுப்பு நடத்த மறுப்பு தெரிவித்தார் சபாநாயகர் தனபால். இதனால் சபாநாயகரின் இருக்கையை முற்றுகையிட்டு திமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

சபாநாயகர் முன்பு இருக்கும் மேஜை உடைக்கப்பட்டு தலைகீழாக கவிழ்க்கப்பட்டது. புத்தகங்களை கிழித்து எறிந்தனர். சட்டபேரவை செயலாளர் ஜமாலுதீன் இருக்கையும் சேதப்படுத்தப்பட்டது. சபாநாயகர் இருக்கை மீது திமுக எம்எல்ஏ ரெங்கநாதன் அமர்ந்தார். சட்டப்பேரவையில் எம்எல்ஏக்கள் முன்பு இருக்கும் மைக்குள் எடுத்து வீசப்பட்டன. எம்எல்ஏ பூங்கோதை, எழும்பூர் ரவிச்சந்திரன் இருக்கை மீது ஏறி நின்று முழக்கமிட்டதாக தகவல்கள் வெளியாகின.

ரகசிய வாக்கெடுப்பு நடத்தக்கோரி திமுக உள்பட எதிர்க்கட்சிகள் கடும் அமளி

முதல் அமைச்சர் எடப்பாட தலைமையிலான அரசின் மீது சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதற்காக
திமுகவினரை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவு

சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டதால் திமுக உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இதையடுத்து பேரவைக்குள் அமர்ந்து திமுகவினர் தர்ணாவில் ஈடுபட்டனர். 

ad

ad