புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 டிச., 2012


முழு எதிர்ப்பில் கமல்! ஜாம்பாவான்களின் ஆதரவு!


கமல்ஹாசனின் விஸ்வரூபம் ஜனவரி 11-ஆம் தேதி ரிலீசாக முழு வீச்சில் தயாராகிக்கொண்டு வருகிறது. விஸ்வரூபம் படத்தின் மீதான எதிர்பார்ப்புகளும், எதிர்ப்புகளும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.  சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கமல், விஸ்வரூபம் படத்தில் எப்படி கதக் நடனத்தை சிறப்பாக ஆடினார் என்பதை விவரித்திருக்கிறார். 

கதக் நடன உலகின் சிறந்த நடனக்கலைஞரான ப்ரிஜு மஹராஜின் தீவிர ரசிகராம் கமல். விஸ்வரூபம் படத்தில் கமலின் நடனம் பார்த்துவிட்டு ப்ரிஜு மஹராஜ் கமலை தொடர்புகொண்டு “கதக் நடனத்தை முறையாக கற்றுக்கொள்ளாமலே இவ்வ்வளவு சிறப்பாக நடனமாடியிருக்கிறீர்களே. பிரமாதம்” என்று கூறினாராம். அதற்கு கமல் “ நான் பல வருடங்களாக உங்கள் நடன அசைவுகளை பார்த்து கதக் நடனம் கற்றுக்கொண்டேன்” என்று கூறினாராம். 

கமலுக்கு இப்படி வாழ்த்துக்கள் 
ஒருபுறம் வந்துகொண்டிருக்கும் நேரத்தில், படத்தில் இஸ்லாமியர்களை தவறாக சித்தரித்திருப்பதாக யாரோ தூண்டிவிட்டதன் பலனாய் இஸ்லாமிய அமைப்புகள் விஸ்வரூபம் படத்திற்கு எதிராக கண்டனங்கள் தெரிவித்தனர். அந்த பிரச்சனையும் ஒரு வழியாக தீர்ந்துவிட்ட நிலையில் விஸ்வரூபமெடுத்தது கமலின் டி.டி.எச் பிரச்சனை. தியேட்டர் உரிமையாளர்கள் தரப்பிலிருந்து பல கண்டனங்களும், கோரிக்கைகளும் வைக்கப்பட்டு வரும் நிலையில், டி.டி.எச் நிறுவனங்களுடனான தனது ஒப்பந்தங்களை முடித்துக்கொண்டு வருகிறார் கமல். 5 டி.டி.எச் நிறுவனங்கள் விஸ்வரூபம் படத்தை ஒளிபரப்ப முன்வந்துள்ளதால் தியேட்டர் அதிபர்கள் மீண்டும் அவசர கூட்டத்தை கூட்டுகிறார்கள்.

வருகிற 3-ந்தேதி திருச்சியில் இக்கூட்டம் நடைபெறும் என்றும் இதில் விஸ்வரூபம் படத்தை தியேட்டர் அதிபர்கள் புறக்கணிப்பது பற்றி ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க இணை செயலாளர் திருச்சி ஸ்ரீதர் கூறினார். விஸ்வரூபம் படத்தை திரையிடும் தியேட்டர்களில் வெளியாகும் இதர படங்களை மற்ற தியேட்டர்களில் திரையிடு வதில்லை என்று அதிரடி முடிவுகள் எடுக்கப்படலாம் என தெரிகிறது. 

மகாநதி படத்தின் மூலம் ‘ஆவிட்’ தொழில்நுட்பத்தையும், பிரஸ்மீட்டுகளில் சி.டி கொடுப்பதையும் கமல் தான் முதலில் செய்தார். அதன்பின் தான் அது எல்லோராலும் பின்பற்றப்பட்டது என்று திரையுலக பிரம்மாக்கள் பலரும் கமலின் புதுமுயற்சியை நியாயப்படுத்துகின்றனர்.கமல் படிக்கட்டில் ஏறப்போகிறாரா? இல்லை லிஃப்டில் ஏறப்போகிறாரா? என்பதை விஸ்வரூபம் 
படத்தின் வெற்றி தான் தீர்மானிக்க வேண்டும்.

ad

ad