புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 டிச., 2012


சிறுமி புனிதா பாலியல் துன்பத்திற்குள்ளாகி கொல்லப்பட்டதைக் கண்டித்து தூத்துக்குடியில் கனிமொழி பங்கேற்ற தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் திரளான கூட்டம். 
ஆர்ப் பாட்ட இடத்தை காவல்துறையினர் இரண்டு முறை மாற்றியும் கூட ஆர்ப்பாட்டத்தின் எழுச்சி குறையவில்லை. அத்துடன், கொலையான புனிதாவின் தாயை சந்தித்து தி.முக.
சார்பில் 3 லட்ச ரூபாய் நிதியளித்தார் கனிமொழி. இந்த விவரம் தாமதமாக எட்ட, அரசு சார்பில் அமைச்சர் சி.த.செல்லபாண்டி யன் அவசர அவசரமாகக் கிளம்பி நேரில்சென்று நிதியளித்தார்.

காவிரியை மீட்டதாக ஜெ.வைப் பாராட்டி ஒரு நாளிதழில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் நிர்வாகிகள் பெயர் போட்டு விளம்பரம் ஒன்று வெளிவந்தது. அதைப் பார்த்து சங்கத்தின் தலைவர் கக்கரி சுகுமாரன் அதிர்ச்சியடைந்துள்ளார். காவிரி பிரச்சினைக்காக தொடர்ந்து போராடி வருகிறோம். இந்த நேரத்தில் பாராட்டு விளம்பரம் கொடுப்போமா? எங்கள் கோரிக்கைகளுக்காக சமீபத்தில் அமைச்சர் வைத்தியலிங்கத்தை சந்தித்தோம். அப்போது விசிட் டிங் கார்டை கொடுத்துவிட்டு வந்தேன். அதை வைத்து இப் படி விளையாடியிருக்கிறார்களே என்கிறார் கக்கரி சுகுமாரன்.

ad

ad