புதன், ஆகஸ்ட் 08, 2012


கோச்சடையான் – விஸ்வரூபம் ரீலீஸ் குறித்து ரஜினி – கமல் ஒப்பந்தம்

இந்த ஆண்டின் மெகா படங்களான கோச்சடையான் மற்றும் விஸ்வரூபம் ஆகியவற்றின் ரிலீஸ் குறித்து ரஜினியும் கமலும் ரகசிய ஒப்பந்தம் போட்டதாக வந்த செய்திகளில் உண்மையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு 4வது பதக்கம்: இதுவரை நடந்த ஒலிம்பிக் போட்டிகளிலேயே இதுதான் ‘பெஸ்ட்

லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று வரும் இந்திய அணியினர், ஒலிம்பிக் போட்டிகளில் முதல் முறையாக 4 பதக்கங்களை வென்று புதிய சாதனை படைத்துள்ளனர்.


60 வருடம் காத்திருந்த கூட்டமைப்புக்கு 6 மாத பா.தெரிவுக்குழுவில் இடம்பெற முடியாததேன்?

கிழக்கு மாகாணசபை தேர்தல் என்பது அரசாங்கத்தை மாற்றும் தேர்தல் அல்ல. இது மாகாணத்தில் வாழும் மக்களின் அடிப்படை தேவைகளான கல்வி, சுகாதாரம், போக்குவரத்து போன்றவற்றை பூர்த்தி செய்யும் நடவடிக்கைக்கான தேர்தலேயாகும்.

வெள்ளி பதக்கம் வென்ற விஜயகுமாருக்கு ராஜீவ் கேல் ரத்னா வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரை
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் சுபேதார் விஜயகுமார் வெள்ளி பதக்கம் வென்றார். இந்நிலையில், இமாச்சல பிரதேச மந்திரிசபை விஜயகுமாருக்கு ராஜீவ் கேல் ரத்னா விருது வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வது என்று தீர்மானம் நிறைவேற்றியது. மேலும் வெள்ளி பதக்கம் வென்றதற்காக அவரை பாராட்டியுள்ளது.

லண்டனில் பிரிட்டன் கொடிக்கு சமமாக பறந்த தமிழீழ தேசியக் கொடி: இலங்கை கடும் கோபத்தில்
லண்டனில் ஒலிம்பிக் விளையாட்டு நிகழ்வுகளின் போது தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தினரின் பிரசாரச் செயற்பாடுகள் முன்னெடுக்கப் படுவதற்குப் பிரிட்டன் இடமளித்திருப்பது தொடர்பில் இலங்கையை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியிருப்பதாக தெரியவருகிறது.

வசூல் ராணியான யாழ். மாநகர முதல்வர்?
உற்சவ காலத்தையொட்டி யாழ். மாநகர சபையால் வர்த்தக நிலையங்கள் அமைக்கவும் மற்றும் துவிச்சக்கர வண்டி மோட்டார் வண்டி மற்றும் கார் போன்வறவற்றிற்கான பாதுகாப்பு நிலையங்கள் போன்றவற்றை கொடுப்பதில் விலைக் கோரல் ஊடாக பல இலட்சங்களை பார்த்த யாழ். மாநகர முதல்வர் தற்போது

அநுராதபுர சிறை அதிகாரிகளால் தாக்கப்பட்ட மற்றும் ஒரு தமிழ் அரசியல் கைதி மரணம்
வவுனியா சிறைச்சாலையில் இருந்து கடந்த மாதம் அநுராதபுரத்துக்கு மாற்றப்பட்டு பின்னர் அங்கு வைத்து சிறைச்சாலை அதிகாரிகளால் தாக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதி இன்று காலை மரணமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

யாழ்.போதனா வைத்தியசாலையில் பல மில்லியன் மோசடி: கணக்காய்வு விசாரணைகள் இன்று ஆரம்பம்
யாழ். போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்கு மாபிள் பதித்தது தொடர்பில் இடம்பெற்றதாகத் தெரியவரும் ஊழல் மோசடிகள் தொடர்பான விசாரணைகளை கணக்காய்வாளர் திணைக்களம் இன்று ஆரம்பித்துள்ளது.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உப குழு அமைக்கும் கலந்துரையாடல் நாளை யாழில் ஆரம்பம்
நாளை காலை 9 மணிக்கு யாழ். கிறீன்கிறாஸ் விடுதியில், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ் தலைமையில் இக்கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதுஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழவின் ஏற்பாட்டில் பிராந்திய சிவில் உப குழுவை அமைப்பது தொடர்பான சிவில் சமூகப்

தமிழ் அரசியல் கைதி டில்ருக்சன் மரணம்! தமிழ் தேசிய மக்கள் முன்னணி கண்டனம்
வவுனியா சிறைச்சாலை தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த தமிழ் அரசியல் கைதி டில்ருக்சன் நேற்று உயிரிழந்த சம்பவம் தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமது கடுமையான கண்டனத்தை தெரிவித்திருக்கின்றது.

யாழ்ப்பாணத்தில் நம் தேசம் என்னும் புதிய பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டுள்ளது !

தமிழ் தேசியத்துக்கான மக்கள் முன்னணி கட்சியினரால், யாழில் நம் தேசம் என்னும் மாதாந்த பத்திரிகை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக   கார்த்திகைப் பூவை சின்னமாகக் கொண்டு மிடுக்குடன் இப் பத்திரிகை பிரசுரமாகியுள்ளது

மறுபடியும் இணைந்த சிம்பு – நயன்


சிம்புவும் நயன்தாராவும் தங்கள் நட்பையும் உறவையும் புதுப்பித்துக் கொண்டுள்ளனர் என்பதுதான் திரையுலகின் புதிய செய்தி. சினிமா காதலர்களில் ஏக பரபரப்பைகத் கிளப்பிய ஜோடி சிம்பு - நயன்தாராதான்.