புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜூலை, 2013

,

பிரபல ஊடகவியலாளர் பிரெட்ரிக்கா ஜேன்ஸ் அமெரிக்காவில் அரசியல் தஞ்சம்
பாதுகாப்புச் செயலாளரின் கடும் அச்சுறுத்தல் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறியிருந்த பிரபல ஊடகவியலாளர் பிரெட்ரிக்கா ஜோன்ஸ், அமெரிக்காவில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளார்.
பிரபல பத்திரிகையாளரான லசந்த விக்கிரமதுங்க கொல்லப்பட்ட அச்சுறுத்தலான சூழ்நிலையிலும் துணிச்சலுடன் முன்வந்து இலங்கையின் பிரபல பத்திரிகையான சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக்கொண்டவர் பிரெட்ரிக்கா ஜேன்ஸ்.
அதுமாத்திரமன்றி கடந்த 25 வருட கால அவரது பத்திரிகைத் துறை அனுபவத்தில் யுத்த சூழ்நிலைகள் மற்றும் போராளிக்குழுக்களின் தலைவர்களை பேட்டி கண்டு அவர் வெளியிட்ட செய்திகள் வாசகர் மட்டத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது.
யுத்தம் முடிவுற்ற நிலையில் வெள்ளைக் கொடிகளுடன் சரணடைய வந்த விடுதலைப் புலிகளின் தலைவர்களை படுகொலை செய்யுமாறு பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச உத்தரவிட்டதை சரத் பொன்சேகாவின் வாயால் வரவழைத்து, உண்மையை உலகறியச் செய்ததில் பிரெட்ரிக்காவுக்கு பெரும் பங்குண்டு.
பின்பு அந்தச் செய்தியை தனது அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காக சரத் பொன்சேகா மறுத்தது குறிப்பிடத்தக்கது. எனினும் சரத் பொன்சேகா, பிரெட்ரிக்கா ஜேன்ஸின் அறிக்கையைக் கொண்டே சரத் பொன்சேகா மீது இராணுவ நீதிமன்றில் தேசத்துரோக வழக்குத் தொடரப்பட்டு அவர் சிறைக்கு அனுப்பப்பட்டார்.
இந்நிலையில் யுத்தத்தின் பின்னரான சூழ்நிலை குறித்து பிரெட்ரிக்கா எழுதிய கட்டுரையொன்றில் பிரபாகரனும், கோட்டாபயவும் ஒன்று இருவருமே கடும் போக்காளர்கள் என்று ரீதியில் கருத்து வெளியிட்டிருந்தார். இதனையடுத்து அவருக்கும் பாதுகாப்புச் செயலாளருக்கும் இடையில் கடும் மோதல் போக்கு ஏற்பட்டது.
மேலும் கோட்டாபய ராஜபக்சவின் மனைவி அயோமாவின் செல்லநாயை சுவிசுக்கு அனுப்ப பிரத்யேக விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது குறித்து பிரெட்ரிக்கா எழுதிய கட்டுரை அவருக்கு கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.
அதனையடுத்து அவர் தனது பாதுகாப்புக் கருதி நாட்டைவிட்டு வெளியேறியிருந்தார். இந்நிலையில் அவர் அமெரிக்காவில் அரசியல் தஞ்சம் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ad

ad