தென் கொரியா தலைநகர் சியோலிலிருந்து ஆசியானா ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று நேற்று அமெரிக்க சான்பிரான்சிஸ்கோ விமான நிலையத்திற்கு வந்தது.
 தரையிறங்கிய போது அந்த விமானம் திடீரென சறுக்கி சென்று விபத்துக்குள்ளானது.
உடனே விமானத்திலிருந்து பயணிகள் கீழே அருகில் போடப்பட்டிருந்த மெத்தைகள் மீது குதித்து உயிர் தப்பினர்.
இதில் எத்தனை பேருக்கு காயம் ஏற்பட்டது என்று தெரியவில்லை. இந்த விபத்துக்கான காரணம்
தெளிவாக தெரியவில்லை.
நீண்ட தூரம் பயணம் மேற்கொண்ட இந்த விமானத்தில் 200-க்கும் மேற்பட்டோர்கள் இருந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
(இரண்டாம் இணைப்பு)
போயிங் 777 விமான விபத்து:2 பேர் பலி
தைபே நகரிலிருந்து சான் பிரான்சிஸ்கோ நகருக்கு சென்ற போயிங் 777 ரக விமானம் தரையிறங்கும் போது உடைந்து விபத்துக்குள்ளானது.
இந்த சம்பவத்தில் 2 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 180 காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கிறது.
|