புதன், நவம்பர் 20, 2013

ராகுல் தொகுதியில் இலவச லேப்டாப் பெற்று வீடு திரும்பிய மாணவி பலாத்காரம்! அமைச்சர் மீது குற்றச்சாட்டு!


 


 
உத்திரப்பிரதேச மாநிலத்தில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இலவச லேப்டாப்பை முதல் அமைச்சர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான அரசு வழங்கி வருகிறது. 
பைசாபாத் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு திங்கள்கிழமை இலவச லேப்-டாப் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. லேப்-டாப்பை அம்மாநில அமைச்சர் அவதேஷ் பிரசாத் வழங்கினார். மாணவர்களுக்கு லேப்-டாப் வழங்கும் விழா மாலை 3 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அமைச்சர் அவதேஷ் பிரசாத் அங்கு மாலை வரவில்லை. மாலை 3 மணிக்கு வரவேண்டிய அமைச்சர் 7 மணி நேரம் கழித்து இரவு 10 மணிக்கு விழா நடைபெற்ற இடத்திற்கு வந்து லேப்-டாப்பை கொடுத்தார். அவருக்காக அனைத்து மாணவர்களும் காக்க வைப்பட்டனர். 
லேப்-டாப் வாங்கியதை அடுத்து மாணவிகள் ஜீப் பிடித்து தங்களது வீட்டிற்கு சென்றனர். ஷாகுல் பஜாரில் உள்ள பள்ளியில் படித்த 12வகுப்பு மாணவிகளும் தங்களது ஊருக்கு ஜீப்பில் சென்றனர். சக பயணிகளும், தன்னுடன் வந்த மாணவிகளும் ஒவ்வொருவராக தங்களது ஊரில் இறங்கிவிட ஒரு மாணவி மட்டும் கடைசியில் தனியாக சிக்கி கொண்டார். அப்போது ஜீப் ஓட்டுநர் அந்த மாணவியை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு கடத்தி சென்று அந்த ஜீப்பிலேயே பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். பின்னர் ஊருக்கு வெளியே சாலையோரத்தில் மாணவியை தள்ளிவிட்டு டிரைவர் தப்பினான். பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு சென்ற மாணவியை பார்த்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர், நடந்த சம்பவத்தினை மாணவி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார், இதுகுறித்த புகாரின் பேரில் டிரைவர் கைது செய்யப்பட்டான், 
இந்த சம்பவத்தினால் கடும் கோபம் அடைந்த ஊர் மக்கள் அமைச்சர் மீது கடும் கோபம் அடைந்துள்ளனர். அவரை கடுமையாக சாடினர். அமைச்சர் விழாவிற்கு காலதாமதமாக வந்ததே இந்த பலாத்சார சம்பத்திற்கு காரணம் என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 
இந்த சம்பவம் முதல் அமைச்சர் அகிலேஷ் யாதவ் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. 

பாதிக்கப்பட்ட மாணவியின் உட்கிராமம் அகில இந்திய காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி எம்.பி.யாக வெற்றி பெற்ற அமேதி தொகுதியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.