புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

20 நவ., 2013

அவிசாவளை பென்ரித் தோட்ட குளோரின் வாயு கசிவு விசாரணை எதிர்வரும் 25ம் திகதி நடைபெறும்
மனித உரிமைகள் ஆணைக்குழு மனோ கணேசனுக்கு அறிவித்தல் 

அவிசாவளை பென்ரித் தோட்டத்தில் அமைந்துள்ள அவிசாவளை நகருக்கு நீர்விநியோகம்
செய்யும் நீர்த்தாங்கியில் இடம்பெற்ற குளோரின் வாயு கசிவினால் பாதிக்கப்பட்ட தோட்ட தொழிலாளர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் சார்பாக ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு கடந்த 5ம் திகதி அளித்திருந்த முறைப்பாட்டை ஏற்றுக்கொண்டு எதிர்வரும் 25ம் திகதி திங்கட்கிழமை காலை 10.45 மணிக்கு நீதிபதி பிரியந்த பெரேரா முன்னிலையில் விசாரணை நடத்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. 

இந்த விசாரணைக்கு மனுதாரர் என்ற முறையில், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசனுக்கும், பிரதிவாதிகள் என்ற முறையில் மத்திய சுற்று சூழல் அதிகாரசபை தலைவருக்கும், தேசிய நீர்வளங்கள் மற்றும் வடிகால் சபை தலைவருக்கும், அவிசாவளை நகரசபை தலைவருக்கும், சம்பந்தப்பட்ட ஹன்வெல பிரதேச செயலாளருக்கும் தகுந்த ஆவணங்களுடன் சமூகமளிக்கும்படி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் எழுத்து மூலம் அறிவித்தல் விடுத்துள்ளார்.