புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 நவ., 2013

பிரித்தானியாவுக்கு எதிராக போர்க்குற்றங்களை சுமத்தப் போகிறதாம் இலங்கை?
புலம்பெயர் நாடுகளில் உள்ள புலிகளுக்கு தேவையான வகையில் இலங்கைக்கு எதிராக போர்க்குற்றங்களை சுமத்தும் பிரித்தானியாவின் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து தகவல்களை வெளியிட இலங்கை அரசாங்கம் தயாராகி வருவதாக திவயின தெரிவித்துள்ளது.
அத்துடன் பிரித்தானியாவில் புகலிடம் வழங்கப்பட்டுள்ள புலிகளின் உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியலை சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டுச் செல்ல உள்ளதாக அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவித்தன.
பிரித்தானியாவினால் மேற்கொள்ளப்பட்டுள்ள போர்க்குற்றங்கள் தொடர்பான தகவல்களை அந்நாட்டில் உள்ள இலங்கையர்களும் பிரித்தானிய பிரஜைகளும் இலங்கைக்கு வழங்கியுள்ளனர்.
ஐ.ஆர்.ஏ. அமைப்புடன் சம்பந்தப்பட்ட போர்க்குற்றவாளிகள் பலர் பிரித்தானியாவில் சுதந்திரமாக நடமாடுவது குறித்த பல தகவல்கள் இலங்கைக்கு கிடைத்துள்ளது.
இதனை தவிர விடுதலைப் புலிகள் அமைப்பிடம் இருந்து மீட்கப்பட்ட போர்த் தளப்பாடங்கள் மற்றும் தொடர்பாடல் கருவிகள் பிரித்தானிய நிறுவனங்களினால் உற்பத்தி செய்யப்பட்டவை.
புலிகளிடம் இருந்து கடல் ஸ்கூட்டர்கள் மீட்கப்பட்டதுடன் அவை பிரித்தானியாவில் தயாரிக்கப்பட்டவை என அரசாங்கத்தின் உயர்மட்டத் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

ad

ad