புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 டிச., 2013

போர்க்குற்ற விசாரணையில் முன்னேற்றம் இல்லாவிட்டால், சர்வதேச நாடுகளின் பொறுமை குறைந்து விடும்!- அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை
போர்க்குற்றங்கள் தொடர்பான உள்ளக விசாரணை நடத்தும்  சர்வதேச நாடுகளின்  வேண்டுகோள்களை இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நிராகரித்து வருகின்ற நிலையில், இலங்கைக்கு அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது
நேற்று செவ்வாய்க்கிழமை வாசிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய, ஆசிய விவகாரங்களுக்கான நிஷா தேசாய் பிஸ்வால் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
உள்நாட்டுப் போரில், இடம்பெற்ற கொடுமைகள் குறித்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், இலங்கை அரசிடம் சர்வதேச நாடுகள் காட்டும் பொறுமை குறைந்து விடும்.
குறிப்பாக, பொறுப்புக்கூறல் விவகாரங்களில் இலங்கை தனது சொந்தமான நடவடிக்கைகளை உறுதியாக மேற்கொள்ள வேண்டும்.
தனது சொந்த நடைமுறைகளின் ஊடாக, இலங்கை இந்த விவகாரங்களுக்குப் பதிலளிக்கும் என்பதையே நாம் விருப்புடன் எதிர்பார்க்கிறோம்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இலங்கையினால் அதனைச் செய்யமுடியும் என்று நம்புகிறோம்.
உண்மையான முன்னேற்றம் இல்லாவிட்டால், அனைத்துலக சமூகத்தின் பொறுமை குறைந்து போகத் தொடங்கி விடும் என்று அவர் கூறியுள்ளார்.

ad

ad