புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 டிச., 2013

சென்னை வந்த ஜெகன்மோகன் ரெட்டி ஜெயலலிதாவை சந்தித்தார்
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான   ஜெகன்மோகன் ரெட்டி, ஒருங்கிணைந்த ஆந்திராவை வலியுறுத்தி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை நேரில் சந்தித்து
ஜெகன்மோகன் ரெட்டி மனு கொடுத்துள்ளார். மேலும், அதற்கு ஆதரவு திரட்டும் வகையில், மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி, ஒடிசா முதல் மந்திரி நவீன்பட்நாயக் மற்றும் சமாஜ்வாடி கட்சித் தலைவர்கள், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார்.


இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து, ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்திற்கு ஆதரவு திரட்டுவதற்காக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று சென்னை வந்தார்.

சென்னை விமான நிலையத்தில் அவருக்கு அக்கட்சியின் தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.  பின்னர் தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதாவை தலைமை செயலகத்தில் ஜெகன் மோகன் ரெட்டி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது ஆந்திர மாநிலத்தை பிரிக்கக்கூடாது என்ற தனது கோரிக்கைக்கு ஆதரவு கேட்டதாக கூறப்படுகிறது.
முதல்வர் ஜெயலலிதாவுடனான சந்திப்பு அரை மணி நேரம் நடைபெற்றது.

ad

ad