புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 டிச., 2013

aus.SIVA-3அவுஸ்திரேலியாவில், பல்லின மக்களின் ஒன்றுபட்ட வாழ்வுக்கு உழைத்தபுங்குடுதீவைப் பிறப்பிடமாக கொண்ட தமிழனுக்கு விருது.
அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் பல்லினக் கலாச்சாரங்கள் இணைந்து வாழ்வதற்காக கடந்த 10 வருடங்களுக்கு மேலாக உழைத்து வருகின்ற, தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கான விருதுகள் மாநில பல்கலாச்சாரா ஆணைக்குழுவினரால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் மிகவும் மதிப்புக்குரிய இவ்விருதினை இலங்கை புங்குடுதீவை பிறப்பிடமாக கொண்ட அவூஸ்திரேலியாவில் குடிபுகுந்துள்ள டாக்டர் கதிரவேலு சிவகுமாரன் அவர்கட்கு கிடைத்துள்ளமை இலங்கையர்கட்கு பெருமை சேர்த்துள்ளது.

மேற்படி விருது வழங்கும் நிகழ்வு கடந்த 05 திகதி விக்டோரிய நகராட்சி மண்டபத்தில் விக்டோரிய மாநில ஆளுநனர் டாக்டர் அலக்ஸ் தலைமையில் இடம்பெற்றதுடன், இந்நிகழ்வில் மாநில முதலமைச்சர் உட்பட பல கபினட் மந்திரிகளும் கலந்து கொண்டனர் என்பது சிறப்பம்சமாகும்.
விக்டோரிய பல்கலாச்சார ஆணைக்குழுவின் தலைவர் திரு.சின் டான்..,
60 விருதுகள் மக்களுக்கு அதிசிறந்த சேவைகளை வழங்கியோருக்கும், 21 விருதுகள் விக்டோரியாவில் பல்கலாச்சார மக்கள் ஒன்றிணைந்து வாழ்வதற்கு உழைத்தோருக்கும் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், இவர்களது இந்த உழைப்பு விக்டோரியாவை மக்கள் வாழ்வதற்கு மிகச் சிறந்த இடமாக்குவதில் பெரும் பங்காற்றியுள்ளதாக பாராட்டியுள்ளார்.
நன்றி அதிரடி 

ad

ad