புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 டிச., 2013

பெற்றோர்களே! ஒரு நிமிடம் உங்கள் பிள்ளைகளைப் பற்றிச் சிந்தியுங்கள்

யாழ் குடாநாட்டில் நடைபெற்று வரும் தமிழர் பண்பாட்டுக் கலாச்சார சீரழிவுகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

தமிழர்களின் கலாச்சாரத்தினை சீரழிப்பதன் ஊடாக மரபியல் பண்பாட்டுக் கட்டமைப்புக்களை உடைத்து தழிழர் என்ற
அடையாளப்படுத்தல் இல்லாதொழிக்கும் செயற்த்திட்டத்தினை அரச இயந்திரமும் அதன் துணை நிறுவனங்களும் செய்து வருகின்றது.
இவற்றைத் தடுப்பது எமது ஓவ்வொருவரதும் கடமையாகும். குறிப்பாக பெற்றோர் பாதுகாவலர்கள் தமது பிள்ளைகள் என்ன செய்கின்றார்கள் என்பதை ஒவ்வொருநாளும் கவனியுங்கள்.
வளந்துவிட்டார்கள் வேலை செய்கின்றார்கள் என்று நினைத்து அவர்கள் மீது அதிக நம்பிக்கை கொள்ளாதீர்கள். உங்கள் பிள்ளைகள் ஒரு வினாடிகளுக்கு ஒருவராக கலாச்சார சீரழிவுகளைச் செய்ய தூண்டப்படுகின்றனர் இவ்வாறான செயற்பாடுகளைச் செய்வதற்கு நன்கு திட்டமிட்ட வகையில் ஒரு குழு செயற்பட்டு வருகின்றது.
இதனை தடுப்பதற்கு நாம் அனைவரும் ஒன்று இணையவேண்டும். தற்போது அலுவலகங்களில் தொழில்புரியும் பெண்கள் கலாச்சார சீரழிவுகளில் ஈடுபட்டு வருகின்றனர் இதற்கான அனைத்து விபரங்களும் எம்மிடமுள்ளது.
யாழ் நகரில் உள்ள விடுதியொன்றில் இரவு வியாபார ஒன்றுகூடல் நிகழ்வு நடைபெற்றது. அங்கு 200ற்கும் மேற்பட்ட ஆண்கள் மதுபானம் அருந்தி தென்னிலங்கையிலிருந்து வந்த களியாட்டப் பெண்களின் நடனத்தினை பார்த்து மதுபோதையில் குத்தாட்டம் போட்டனர்.
இரண்டு பெண்கள் தமிழர் பாரம்பரிய உடையுடன் வந்திருந்தனர். ஆனால் எந்த பெற்றோரோ பாதுகாவலரோ இல்லாமல் கலந்து கொண்டனர். இவ்வாறான நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் பல நிறுவனங்களினால் நடத்தப்படுகின்றது. அதில் கலந்துகொள்ளும் பெண்கள் தங்களது பாதுகாப்பினையும் உறுதிப்படுத்தி தமிழர் பண்பாட்டிற்கு பங்கம்விளைவிக்கும் செயற்பாடுகளுக்கு இடம் கொடுக்காது பெற்றோர் பாதுகாவலர்களுடன் கலந்து கொள்ளவும்.
இரவு களியாட்ட நிகழ்வுகளை தவிர்க்கவும். நன்கொடைகள் பரிசுப்பொதிகள் வழங்குவதாக ஆசைவார்த்தைகாட்டி தொடர்புகளை வலுப்படுத்தி நமது பெண்களை பாலியல் தொழிலாளர்கள் ஆக்கும் செயற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றது.
அன்றாட வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்ததினால் அதற்கு முகம்கொடுத்துள்ள உழைக்கும் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் உங்களது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக நமது தழிழர் பண்பாட்டு கலாச்சாரங்களை அலட்சியப்படுத்தாது மதித்து நடவுங்கள். இதனை ஒவ்வொரு தழிழனும் தனது இலட்சியமாகக் கொள்ளுங்கள் பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளைத் தனியே எங்கும் அனுப்பாதீர்கள்.
இரவு வேளையில் தன்னந்தனியே தமிழ்ப் பெண்கள் சென்ற காலம் மலையேறிவிட்டது. உங்களது பிள்ளைகளை மிகவும் அவதானமாக வளப்பதன் ஊடாகத்தான் எதிர்கால சந்ததியை சிறந்த பண்பாடுமிக்கவர்களாக உருவாக்கலாம்.
பெண்களே நீங்கள் சமூக பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளவேண்டும். தழிழ்ச்சமூகத்தின் கண்கள் நீங்கள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். உங்களை பகடைக் காய்களாக சில நிறுவனங்கள் அரச இயந்திரங்கள் கையாண்டு வருகிறது.
இதற்கான அனைத்து ஆவணங்கள், தரவுகள் எம்மிடம் உள்ளது. தழிழர் பண்பாட்டிற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயற்படும் இருபாலாரும் மக்கள் முன்னிலையில் தண்டிக்கப்படுவர்.
-தமிழ்த் தேசிய பண்பாட்டுப் பேரவை-

ad

ad