ஆம் ஆத்மி கட்சியின் கொள்கைகள் குறித்து காங்கிரஸ், பாஜகவுக்கு கடிதம்: அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி
செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேலும் கூறியதாவது,
காங்கிரஸ் கட்சி, பாஜகவுக்கு எதிராக தொடங்கப்பட்டது ஆம் ஆத்மி கட்சி. அப்படியிருக்கும்போது ஆம் ஆத்மி கட்சி எப்படி காங்கிரஸ், பாஜகவிடம் ஆதரவு கேட்கும். எனவே ஆம் ஆத்மி கட்சியின் கொள்கைகள் குறித்து காங்கிரஸ், பாஜகவுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
பாஜக, காங்கிரசிடம் இருந்து வரும் பதில் கடிதத்தை பொறுத்து முடிவு செய்யப்படும். ஆம் ஆத்மி கட்சியின் கொள்கைகள் தொடர்பாக பாஜக, காங்கிரஸ் கருத்து தெரிவிக்க வேண்டும். காங்கிரஸ், பாஜக ஆகியவை மக்களைப் பற்றி கவலைப்படவில்லை. டெல்லியில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கு காங்கிரஸ் பாஜகவே காரணம் என்றார்.