www.pungudutivuswiss.com www.madathuveli.com www.panavidaisivan.com www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com தொடர்புகளுக்கு pungudutivu1@gmail.com

புதன், அக்டோபர் 02, 2013

நரேந்திர மோடியுடன் சந்திரபாபு நாயுடு; பா.ஜனதா கூட்டணியில் தெலுங்கு தேசம் சேர வாய்ப்பு?
பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் சூழ்நிலையில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியும், பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும்
லாலுவுக்கு சிறை எதிரொலி: ம.பி. மாநில ராஷ்டிரீய ஜனதாதள கட்சி, பா.ஜனதாவுடன் இணைந்தது
மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் ராஷ்டிரிய ஜனதா தள தலைவரும், பீகார் மாநில முன்னாள் முதல்–மந்திரியுமான லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என ராஞ்சி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இளைஞனின் சடலம் புதருக்குள்ளிருந்து மீட்பு : நொச்சிக்குளத்தில் சம்பவம்
நொச்சிக்குளம் மேற்கு கரைப் பகுதியில் இருந்து இளைஞன் ஒருவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மொரவௌ பொலிஸார் தெரிவித்தனர்.

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் பாரிய ஆர்ப்பாட்டம்

பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் கண்டி நகரத்தில் பாரிய ஆர்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் அரசியல் அமைப்பின் 157 (அ) உறுப்புரையையும் அரசியல் அமைப்பிற்கான ஆறாவது திருத்தத்தையும், மீறியுள்ளதாக உயர் நீதிமன்றில் தாக்கல் செய்த 6 மனுக்களும் இன்று பிரதம நீதியரசர் மொகான் பீரிஸ், நீதியரசர்களான சந்திரா ஏகநாயக, ரோகினி மாரசிங்க ஆகியோர் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

1. இந்த மனுக்களில் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டிருந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா ஆகியோர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி
 முதல்வர் செய்த முதல் பணி 
news
வடக்கு மாகாண முதலமைச்சராக நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்ட க.வி.விக்னேஸ்வரன் தனது முதல் பணியாக முதியோர் தினமான நேற்று சுழிபுரம் வழக்கம்பரை சிவபூமி முதியோர் இல்லத்துக்குச் சென்று அவர்களுடன் கலந்துரையாடினார்.
செங்­க­லடி படு­கொலை: சந்தேகநபரான மகளை பிணையில் விடு­விக்கக் கோரி மனு­த் தாக்கல்
செங்கலடி நகரில் தாயும் தந்தையும் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான பிரதான சந்தேகநபராகக் கருதப்படும் மகளுக்கு பிணை கோரி மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டத்தரணிகளான நிஸாம் காரியப்பர் மற்றும் ஏ.ஏ. றூமி ஆகியோர் இந்த மனுவினைத் தாக்கல் செய்துள்ளனர்.
செங்கலடியில் பிரபல வர்த்தகரான சிவகுரு ரகு அவரது மனைவி சுந்தரமூர்த்தி விப்ரா ஆகியோர் கடந்த ஏப்ரல் மாதம் 7ம் திகதி நள்ளிரவு படுக்கையறையில் கோரமான முறையில் வெட்டி குத்திக் கொலை செய்யப்பட்டிருந்தார்கள்.
முதலாவது அரசவை நிறைவு! ஒக்ரோபர் 26ல் தேர்தல்! செயற்பாடுகள் விரிவாக்கப்படும்: பிரதமர் வி.உருத்திரகுமாரன்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவை தனது ஆட்சிமைக்காலமாகிய மூன்று வருடங்களை நிறைவு செய்துகொள்கின்றமையால் அரசாங்கத்தின் அரசியலமைப்பு விதிகளுக்கமைய 2013 ஒக்ரோபர் 1ம் நாளாளன்று முதலாவது அரசவை கலைக்கப்படுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் அறிவித்துள்ளார்.
இதேவேளை வரும் (ஒக்ரோபர் 26) தேர்தல் மூலம் தெரிவாகும் இரண்டாம் அரசவையானது தனது பணிகளை தொடங்கும் வரை தற்போதைய அமைச்சரவை தொடந்து நீடிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பிரதமர்
ஐ.நா சட்டக்குழுவில் இலங்கை: ஏமாற்றமளிப்பதாக கனடா தெரிவிப்பு
ஐக்கிய நாடுகள் சபையின் 68வது பொதுச் சபையின் ஆறாவது சட்டக் குழுவிற்கு இலங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளது.
யாழ்.மாநகர சபையில் ஈ.பி.டி.பி யின் ஆட்சி மோசடிகள் நிறைந்ததே!- பகிரங்கமாக ஒப்புக் கொண்டார் மேயர்
ஈ.பி.டி.பி தலைமையிலான யாழ்.மாநகர சபையின் ஆட்சியானது ஊழல் மோசடிகள் நிறைந்தது என்பதை யாழ்.மாநகர மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார்.
யாழ்.மாநகர சபையில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவிலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இதனை பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார்.
யாழ்.மாநகர சபையில் ஊழல் மோசடிகளிலும் நிர்வாக மோசடிகளிலும் ஈடுபட்டவர் ஈ.பி.டி.பி உறுப்பினர் விஜயகாந்த் ஆவார்.