புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 அக்., 2013

செங்­க­லடி படு­கொலை: சந்தேகநபரான மகளை பிணையில் விடு­விக்கக் கோரி மனு­த் தாக்கல்
செங்கலடி நகரில் தாயும் தந்தையும் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான பிரதான சந்தேகநபராகக் கருதப்படும் மகளுக்கு பிணை கோரி மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டத்தரணிகளான நிஸாம் காரியப்பர் மற்றும் ஏ.ஏ. றூமி ஆகியோர் இந்த மனுவினைத் தாக்கல் செய்துள்ளனர்.
செங்கலடியில் பிரபல வர்த்தகரான சிவகுரு ரகு அவரது மனைவி சுந்தரமூர்த்தி விப்ரா ஆகியோர் கடந்த ஏப்ரல் மாதம் 7ம் திகதி நள்ளிரவு படுக்கையறையில் கோரமான முறையில் வெட்டி குத்திக் கொலை செய்யப்பட்டிருந்தார்கள்.

இச்சம்பவம் தொடர்பாக கொலை செய்யப்பட்டவர்களது இளைய மகள் ரகு தக் ஷனா பிரதான சந்தேகநபராகவும் அவரது வகுப்பறை நண்பர்களான சிவநேசராசா, அஜந் குமாரசிங்கம், நிலக்ஷன் புவனேந்திரன், சுமன் ஆகியோர் ஏனைய சந்தேக நபர்களாகவும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது பிரதான சந்தேகநபரான ரகு தக் ஷனாவை பிணையில் விடுவிக்கக்கோரி அவரது பாட்டி திருமதி சந்திராதேவி சுந்தரமூர்த்தி மட்டக்களப்பு உயர்நீதிமன்றில் விண்ணப்பம் செய்துள்ளார்.
சந்தேக நபரின் குடும்பப் பின்னணி சிறந்தது. எவரும் குற்றச்செயல்களில் சம்பந்தப்பட்டதாக தகவல் இல்லை. இக்கொலை திட்டமிட்டுச் செய்யப்பட்டதல்ல.
சந்தர்ப்பம் சூழ்நிலை இக்கொலைக்கு தூண்டியுள்ளது. சந்தேக நபர் கொலைக்குப் பின்னரான தாற்பரியத்தை புரிந்திருக்கவில்லை. இவ்வாறான நிலையில் இவரைத் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைப்பதனால் இவரது எதிர்காலம் பாதிக்கப்படுமென அம்மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை,கொலை செய்யப்பட்டவர்கள் சம்பவ தினம் உட்கொண்ட உணவின் ஒருபகுதி இரசாயன பகுப்பாய்வுகளுக்காக கொழும்பிற்கு அனுப்பிவைக்கப்ப ட்டுள்ள போதிலும் இதுவரை குறித்த பகுப்பாய்வின் அறிக்கை எதுவும் கிடைக்கவில்லையென ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

ad

ad