புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஜூன், 2014


வாகன ஹோர்ன் சத்தமெழுப்பலை கட்டுப்படுத்தும் திட்டம் இன்று நடைமுறை
வாகன ஹோர்ன் சத்தமெழுப்பலை கட்டுப்படுத்தும் திட்டம் இன்று கொழும்பில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு இது நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக கொழும்பு மாநகர பொதுமக்கள் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
காலை 8.30க்கு இந்த திட்டம் மாநரக சபையில் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதன்படி பேருந்துகளில் அதிக ஹோர்ன் ஒலி எழுப்பல்களை கண்காணிக்கும் திட்டமும் இன்று வீதிகளில் நடைமுறைக்கு வருவதாக கொழும்பு மாநகரசபை அறிவித்துள்ளது.
அதிக ஹோர்ன் சத்தமாக எழுப்பப்படுவதால், பாடசாலை பிள்ளைகள் படிக்க முடிவதில்லை. பொதுமக்களுக்கும் அசௌகரியங்கள் ஏற்படுகின்றன. மனநிலை பாதிப்பும் ஏற்படுகிறது.
இதனை தவிர்க்கும் வகையில் 2011 ஆம் ஆண்டில் இருந்து இந்த திட்டம் ஜூன் 5 ஆம் திகதியில் அமுல்செய்யப்பட்டு வருகிறது.
இதன்போது பேரூந்துகளில் இருந்து அளவுக்கு அதிகமான ஹோர்ன் சத்தமெழுப்பல் மேற்கொள்ளப்படுகிறதா? என்பது கண்காணிக்கப்படவுள்ளதாக கொழும்பு மாநகரசபை அறிவித்துள்ளது.

ad

ad