புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஜூன், 2014


நவநீதம்பில்லைக்கு பதிலாக அடுத்த ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் ஜோஸ் ரமோஸ் ஹோட்டா தெரிவாவாரா ?
எதிர்வரும் ஓகஸ்ட்டில் பதவி இளைப்பாறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு பதிலாக (Guinea-Bissau) கினியா பிஸோ நாட்டின் ஐநாவுக்கான பிரதிநிதி (Jose Ramos-Horta) ஜோஸ் ராமோஸ் ஹோட்டா நியமிக்கப்படலாம் என்று இன்னர் பிரஸ் சிட்டி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
எனினும் இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் செய்தியாளர் சந்திப்பில் வினவியபோது எந்த ஒரு பதிலும் வழங்கப்படவில்லை.

இந்தநிலையில் இந்தோனேசியாவின் தாருஸ்மானின் பெயரும், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இரண்டு வேட்பாளர்களின் பெயர்களும் இந்த பதவிக்கு பிரேரிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் பதவிக்கு நியமிக்கப்படலாம் என்று கூறப்படும் கினியா பிஸோவின், ஜோஸ் ராமோஸ் ஹோட்டா ஜப்பானை மையமாகக்கொண்ட யுபிரைன் டிவில் (UBrain) பணியாற்றியவர்.
அவர் அந்த நிறுவனத்தில் ஆலோசகராக இருந்துள்ளார் என்று இன்னர் சிட்டி பிரஸ் சுட்டிக்காட்டியுள்ளது.
எனினும் செய்தியாளர் சந்திப்பின்போது பதில் வழங்கிய ஐக்கிய நாடுகள் செயலாளரின் பேச்சாளர் பர்ஹான் ஹக், அவ்வாறான தகவலை தாம் அறிந்திருக்கவில்லை என்று குறிப்பிட்டார்.
அவர் அந்த பதவியை வகித்திருந்தாலும் வகித்திருக்காவிட்டாலும் அது தொடர்பில் கருத்துக் கூறமுடியாது என்று ஹக் தெரிவித்தார்.

ad

ad