புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஜூன், 2014

உலகக் கோப்பை கால்பந்து போட்டியை வரவேற்கத் தயாராகும் பாலியல் தொழிலாளிகள் 
உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள், எதிர் வரும் 12-ம் திகதி முதல் ஜூலை 13-ம் திகதி வரை தென் அமெரிக்க நாடான பிரேஸிலில் நடைபெறவுள்ள நிலையில் அந்நாட்டில் உள்ள 10 லட்சம் பாலியல் தொழிலாளிகளும் போட்டியை வரவேற்க தயாராகி வருகின்றனர்.
 
இப்போட்டிகளை காண வெளிநாடுகளைச் சேர்ந்த 30 லட்சத்து 70 ஆயிரம் ரசிகர்கள் பிரேஸிலுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
பாலியல் தொழில் கூடங்களில் வசிக்கும் பாலியல் தொழிலாளிகள், மும்முரமாக ஆங்கில மொழியை பயின்று வருகின்றனர். இவர்களுக்கென்று பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
 
பிரேஸிலில் 2000-ம் ஆண்டிலிருந்து பாலியல் தொழில் சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளதால், இவர்களின் செயல்பாடுகள் அனைத்தும் வெளிப்படையாகவே இருந்து வருகிறது. பலர் தங்களுக்குள் இணைந்து சங்கம்வைத்துச் செயல்படுகின்றனர்.
 
பாலியல் தொழில் கூடங்களைத் தவிர, மசாஜ் நிலையங்கள், பாலியல் தொழிலாளர்களுக்கு அனுமதி தரும் விடுதிகள் உள்ளிட்டவையும் தங்களின் வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. 
 
இதேவேளை, பிரேஸிலில் பாலியல் தொழிலுக்கு சட்டப்பூர்வமான அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ள போதும் அங்குள்ள தொழிற்சங்கங்களின் பெண் உறுப்பினர்கள் இத்தொழிலுக்கு எதிரான பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கத

ad

ad