புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 மார்., 2015

எதிர்க்கட்சித் தலைவரின் கேள்விக்கு பதிலளிக்க முடியாது: வடக்கு முதல்வர் காட்டம்
தமிழ் மக்களுக்கு வீடுகளையும், வீதிகளையும், குடிநீர் வசதிகளையும் செய்து கொடுப்பதற்காக உங்களை சந்திக்க முயற்சித்த மலேசிய பிரதமரின் விசேட பிரதிநிதியை எதற்காக சந்திக்கவில்லை? என வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர், முதலமைச்சரிடம் எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர் காட்டமாக பதிலளித்துள்ளார்.
முதலமைச்சர் தனது பதிலில் குறிப்பிட்டதாவது,
கடந்த மாதம் 17ம் திகதி எமக்கு தொலைநகல் ஒன்று கிடைத்தது. அதில் மலேசிய பிரதமரின் பிரதிநிதி டத்தோ ஸ்ரீ எஸ்.சாமிவேல் என்னை சந்திப்பதாகவும் இந்தச் சந்திப்பு 27ம் திகதி நடைபெறும் எனவும் கூறப்பட்டிருந்தது.
பின்னர் 20ம் திகதி குறித்த மலேசிய நாட்டின் வெளிவிவகார அமைச்சிலிருந்து பேசிய சுசி என்பவர் என் செயலாளரிடம் கேட்டிருந்தார்.
சாமிவேல் யாழ்ப்பாணம் வருவதற்கு தேவையான வாகன ஒழுங்குகளை செய்கிறீர்களா? என அதற்கு எனது செயலாளர், அந்த வாகன ஒழுங்குகளை மலேசிய வெளிவிவகார அமைச்சு மேற்கொள்ளாதா? அவ்வாறு செய்ய முடியாது என்றால்,  அதற்குப் பின்னர் முதலமைச்சர் அந்த வாகன ஒழுங்குகளை செய்வார் என கூறியிருந்தார்.
பின்னர் எந்த தொடர்பும் இல்லை. நான் 27ம் திகதி காலையில் நீண்ட நேரம் காத்திருந்தபோதும் அவர் வருகைதரவில்லை. பின்னர் நாம் அந்த சுசி என்பவருடன் தொடர்பு கொண்டு கேட்டபோது சந்திப்பதற்கான அனுமதி எழுத்துமூலம் கேட்கவில்லை.
எனவே சந்திப்பு இல்லை என கூறினார். பின்னர் நாம் கேட்டோம். எழுத்துமூலம் அனுமதி கேட்குமாறு யாரும் கேட்கவில்லை.
எனவே அதைக் கேட்டிருந்தால் நாங்கள் கொடுத்திருப்போமே என. ஆனால் சந்திப்பு இல்லை என்பதே அவர்களுடைய முடிவு. எனவே இதில் என்னுடைய தவறு ஒன்றும் இல்லை.
இந்த விடயத்தில், நான் சந்திக்கவில்லை என்பதை வெளிநாட்டு பிரதிநிதிகள் கேட்கலாமே தவிர, எதிர்க்கட்சி தலைவர் என்னிடம் கேட்க முடியாது.
மேலும் இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது. ஆனால் வெளிநாட்டவர்களும், மக்களும் என்னைக் குறித்து தவறாக விளங்கிக் கொள்ள கூடாது என்பதற்காகவே இதனை நான் கூறினேன் என பதிலளித்தார்.

ad

ad