புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 மார்., 2015


9 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வென்றது தென்னாப்பிரிக்கா

உலக கோப்பை கிரிக்கெட் காலிறுதி போட்டியில் இலங்கை தென் ஆப்பிரிக்காவின் சூழலில் சிக்கி 133 ரன்களிலே ஆட்டம் இழந்தது. தென் ஆப்பிரிக்கா வீரர்கள் தாஹீர், டூமினி அபாரமான பந்துவீச்சு மூலம் இலங்கையினை பரிதாபநிலைக்கு தள்ளினர்.

11-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் கால்இறுதி சுற்று இன்று தொடங்கியது. ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அரங்கேறியுள்ள முதலாவது கால்இறுதியில் முன்னாள் சாம்பியன் இலங்கையும், தென்ஆப்பிரிக்காவும் யுத்தத்தில் இறங்கியுள்ளது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி  பேட்டிங் செய்து விளையாடியது.

இலங்கை தொடக்க ஆட்டக்காரர் பெரேரா 3 ரன்களில் அப்போட் பந்துவீச்சில் காக்கிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதனையடுத்து தில்ஷனுடன், சங்கக்கரா  களமிறங்கினார். தென் ஆப்பிரிக்கா அணி இலங்கையின் தொடக்க பாட்னர் ஷிப்பை உடைத்தது. தில்ஷன் ரன்எதுவும் எடுக்காமலே ஸ்டெயின் பந்துவீச்சில்,  பிளிஸ்சிஸிடம் கேட்ச் கொடுத்து வேகமாக நடையை கட்டினார். இலங்கை அணிக்கு, தென் ஆப்பிரிக்கா நெருக்கடியை கொடுத்தது. இலங்கை அணி 10  ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு, 35 ரன்கள் எடுத்து இருந்தது. சங்கக்கரா 2 ரன்களுடனும், திரிமன்னே 27 ரன்களுடனும் களத்தில் நின்று விளையாடினர்.

தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சாளர்கள், தாஹிர் மற்றும் டுமினி தலா மூன்று விக்கெட்களை வீழ்த்தினர். மோர்கல், ஸ்டெயின், அப்போட் ஆகியோர் தலா ஒருவிக்கெட்டை வீழ்த்தினர். ஸ்டெயின், அப்போட் இலங்கையின் தொடக்க ஆட்டக்காரர்களை ஆதிக்கம் செலுத்தவிடாமல் வெளியேற்றினர். டுமினி ஹாட்ரிக் விக்கெட்களை கைப்பற்றி இலங்கையை பரிதாப நிலைக்கு தள்ளினார். தென் ஆப்பிரிக்கவின் கையே ஓங்கியது.

 மழை நின்றதும் மீண்டும் ஆட்டம் தொடங்கியது. இலங்கை வீரர் மலிங்கா 3 ரன் களில் அவுட் ஆனார். இம்ரான் தாஹீர் மேலும் ஒருவிக்கெட்டை கைப்பற்றினார். இலங்கை 37.2 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து 133 ரன்களிலே ஆட்டம் இழந்தது. மிக எளிய இலக்குடன் தென் ஆப்பிரிக்கா பேட்டிங் செய்ய தொடங்கியது அணியின் தொடக்க அட்டகாரர் ஆம்லா 16 ரன்களில் அவுட் ஆனார் அடுத்து  பிளச்சி களம் இறங்கினார்.தென் ஆப்பிரிக்கா 18 

ஓவர்களில் 134 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது டிகாக் 78 ரனகளும் பிளஸ்சி 21 ரன்களும் எடுத்து இருந்தனர். இதனால் உலக கோப்பை போட்டியில் இருந்து இலங்கை வெளியேறியது.

ad

ad