புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஏப்., 2015

அவசர உதவிப் பொருட்களுடன் இலங்கைக் குழு நேபாளம் விரைவு

நேற்றும் நில அதிர்வு

உயிரிழப்பு 2200 ஆக அதிகரிப்பு

நேபாளத்தை தாக்கிய பயங்கர நில நடுக்கத்தில் 2200க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது நாளாகவும் மற்றொரு மோசமான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
கடந்த சனிக்கிழமை தாக்கிய நில நடுக்கம் நேபாளத்தில் 80 ஆண்டுகளின் பின் ஏற்பட்ட மோசமான நில
நடுக்கமாக பதிவானது. இந்நிலையில் நேற்று இடம்பெற்ற மோசமான ஒரு தொடர் நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோளில் 6.7 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. இதனால் தலை நகர் கத்மண்டுவிலும் நாட்டின் மற்ற பகுதிகளிலும் கட்டடங்கள் மோசமாக அசைந்து, அல் லாடி, அதிர்ந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அச்சத்தில் பொதுமக்கள் கட்டடங் களைவிட்டு வெளியேறி மைதானங்களை நோக்கி ஓடினர்.
நேபாளத்தில் மட்டுமல்லாமல், வட இந்தியா, பங்களாதேஷிலும் நேற்றைய நில நடுக்கம் உணரப்பட்டதோடு, எவரெஸ்ட் பிராந்தியத்தில் புதிதாக பளிச்சரிவுகளையும் தோற்றுவித்துள்ளது.
அண்டை நாடுகளில் இருந்து நிவாரணப் பொருட்கள், மருத்துவர்கள், மீட்பு மற்றும் நிவாரணப் பணியாளர்கள் பலரும் விமானங்கள் மூலம் நேபாளத்தில் வந்தவண்ணமுள்ளனர்.
உறவுகள் தொடர்புகொள்ள 009779851020057
ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் அவசர கூட்டம்
தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கான இந்தியா மற்றும் சீனா விமானங்களும் கத்மண்டுவிற்கு வந்து சேர்ந்துள்ளன.
அடுத்த சில நாட்களுக்குள் நேபாளத்தில் மோசமான காலநிலையும் தொடர் மழையும் நிலவும் என்பதால் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் கடுமையாக பாதிக்கப்படலாம் என்று அஞ்சப்படுகிறது.
சனிக்கிழமை நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட பின்தங்கிய பகுதிகள் இன்னும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் துண்டிக்கப்பட்ட நிலையில் இருப்பதால் பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. பல மலைப்பாதைகளும் நிலச்சரிவுகளால் தடைப்பட்டுள்ளன.
தலைநகர் கத்மண்டுவில் மாத்திரம் 700 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்திருப்பதால் அவர்களுக்கான மருத்துவ உதவிகளை வழங்குவதிலும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.
கட்டட இடிபாடுகள் மற்றும் சிதைவு களில் சிக்கி இருப்பவர்களை காப்பாற்று வதற்கு மீட்பாளர்கள் வெறும் கைகளை பயன்படுத்தியே நேற்றைய தினத்திலும் குப்பைகளை அப்புறப்படுத்தி வருகின்றனர்.
மத்திய நேபாளத்தில் தலைநகர் கத்மண்டு மற்றும் பொகாரா நகருக்கு இடையில் கடந்த சனிக்கிழமை காலை ரிச்டர் அளவுகோளில் 9.8 புள்ளிகளாக இந்த நில நடுக்கம் பதிவானது. இந்த பகுதியை ஒட்டிய இந்தியா, பங்களாதேஷ், சீனாவின் திபெத் பிராந்தியங்களிலும் இந்த நில நடுக்கத்தில் உயிர்ப்பலிகள் இடம்பெற்றன. கடந்த 1934 ஆம் ஆண்டு சுமார் 8,500 பேர் கொல்லப்பட்ட நில நடுக்கத்திற்கு பின்னர் நேபாளத்தில் இடம்பெற்ற மோசமான நில நடுக்கம் இதுவாகும்.
இதேவேளை நேபாளத்தை சனிக்கிழமை காலை உலுக்கிய பாரிய பூகம்பத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான நிவாரணம் மற்றும் மருத்துவ உதவிகளை பெற்றுக்கொடுக்கும் பணிகளை இலங்கை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரையின் பேரில் வெளிவிவகார அமைச்சு அதற்கான துரித ஏற்பாடுகளை உடனுக்குடன் முன்னெடுத்து வருகின்றது.
பூகம்பத்தினால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ள போதும். எந்தவொரு இலங்கையரும் இந்த பூகம்பத்தில் சிக்கி உயிரிழக்கவோ அல்லது காயங்களுக் குள்ளாகவோ இல்லையென நேபாளத் திலுள்ள இலங்கை தூதுவர் டபிள்யு. எம். செனவிரட்ன ஊர்ஜிதப்படுத்தியுள்ளார்.
இந்த அனர்த்தம் நேபாளத்தின் கத்மண்டுவுக்கும் பொக்ஹாராவுக்கும் இடையிலேயே ஏற்பட்டுள்ளது. எனவே அப்பகுதியிலுள்ள மனிப்பால் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வரும் 120 இலங்கை மாணவர்களும் கத் மண்டுவை வசிப்பிடமாகக் கொண்டிருந்த 20 இங்கையர்களும் எவ்வித ஆபத் துக்களுமின்றி உயிர் தப்பியிருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சு உறுதி செய் துள்ளது.
இதேவேளை, இலங்கையர்கள் நேபாளத்தில் வசிக்கும் தமது உறவுகள் தொடர்பிலான தகவல்களை அறிந்து கொள்ளும் முகமாக நேபாளத்திலுள்ள இலங்கை தூதரகத்தில் நேபாளத்தி லுள்ள 009779851020057 என்ற விசேட தொலைபேசி இலக்கமொன்றும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கத்திற்கூடாக தமது உறவினர்கள் பாதுகாப்பாக உள்ளனரா என்பதனை இலங்கையர்கள் உறுதி செய்துகொள்ள முடியும்.
இலங்கையிலுள்ள நேபாள தூதுவர் மூலமாகவும் அங்கு தேவைப்படும் நிவாரண உதவிகள் தொடர்பான விவகாரங்களை வெளிவிவகார அமைச்சு திரட்டிய வண்ணமுள்ளது.
நேபாளத்தில் முன்னெடுக்கவுள்ள நிவாரணப் பணிகளுக்காக இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு பிரதமர் அலுவலகமும் பாதுகாப்பு அமைச்சும் தமது முழுமையான ஒத்துழைப்பினை வழங்கி வருகின்றன.
சனிக்கிழமை காலை நேபாளத்தில் 7.9 ரிக்டர் அளவிலான பூகம்பம் இடம்பெற்றதனைத் தொடர்ந்து, அந்நாட்டிற்கு தேவையான அவசர நிவாரண உதவிகளை வழங்குவது தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவசர கூட்டமொன்றை ஜனாதிபதி செயலகத்தில் கூட்டினார்.
ஜனாதிபதியின் செயலாளர், பிரதமரின் செயலாளர், சுகாதார அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர், வெளிவிவகார அமைச்சின் செயலாளர், பாதுகாப்புச் செயலாளர், முப்படைத் தளபதிகள், பொலிஸ்மா அதிபர் மற்றும் முக்கிய அமைச்சுக்களின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்திற்கு இலங்கையிலுள்ள நேபாள தூதுவரும் கலந்துகொண்டு அங்கு ஏற்பட்டுள்ள உடனடி தேவைகள் குறித்து சுட்டிக் காட்டினார்.
சனிக்கிழமை இரவே இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான விமானமொன்றினூடாக சுகாதார அமைச்சு மற்றும் இராணுவத்தைச் சேர்ந்த வைத்தியர்கள், தாதியர்கள். சத்திரசிகிச்சை நிபுணர்கள், மயக்க மருந்து நிபுணர்கள் ஆகியோர் அவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுடன் அங்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தொடர்பு சாதன உபகரணங்கள் மற்றும் மீட்பு பணிகளுக்கு பயன்படுத்தும் உபகரணங்களும் இலங்கையிலிருந்து நேபாளத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள் ளன. அதனைத் தொடர்ந்து நேற்றுக் காலையும் மேலுமொரு தொகுதி மருத்துவ உதவிகள் மற்றும் நிவாரணப் பொருட்களுடன் இன்னுமொரு விமானம் கத்மண்டுவிற்கு அனுப்பி வைக்கப் பட்டது.
வெளிவிவகார அமைச்சு இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பிலான ஆழ்ந்த சோகத்தையும் அனுதாபத்தை யும் நேபாளத்திற்கு தெரியப்படுத்தி யுள்ளது.
நேபாளத்தில் வாழும் இலங்கையர்களின் பாதுகாப்பு மற்றும் அங்கிருந்து இலங்கை திரும்ப விரும்புவோர் தொடர்பிலான ஏற்பாடுகளை அங்குள்ள இலங்கை தூதரகம் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றது.

ad

ad