புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஏப்., 2015

எதிர்வரும் தேர்தலில் ஐ.தே.க.வரலாறு காணாத வெற்றியை பெறும்
மேல் மாகாண சபை உறுப்பினரும் களுத்துறை மாவட்ட ஐ.தே.க. அமைப்பாளருமானஇப்திகார் ஜமீல்

பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் ஒன்று இடம்பெறுமானால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வரலாறு காணாத வெற்றியை இந்நாட்டின் சகல இன மக்களும் பெற்றுக் கொடுப்பார் கள் என்பதில் சந்தேகமில்லை என்று மேல் மாகாண சபை உறுப்பினரும் ஐ.தே.க. களுத்துறை மாவட்ட அமைப் பாளருமான இப்திகார் ஜெமீல் கூறினார். ஜனாதிபதி தேர்தலின் பின் னர் தற்போது நிலவி வரும் அரசியல் சூழ்நிலை குறித்து இப்திகார் ஜெமீல் தினகரனுக்கு வழங்கிய விபரம்.
ஹீற்போதுள்ள சூழ்நிலையில் தேர்தல் ஒன்று நடை பெறுமானால், 1977ம் ஆண்டு பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதி பதி ஜே.ஆர். ஜயவர்தன தலைமை யில் ஐ.தே.க. ஆறில் ஐந்து மடங்கு பெரும்பான்மையைப் பெற்றதை விடவும் மேலதிகமான பெரும்பான்மை வாக்குகள் ஐ.தே.கட்சிக்கு கிடைக் கக் கூடிய கள நிலவரமே காணப்படு கிறது.
கேள்வி: இவ்வாறு வெற்றி பெறும் என்பதை நீங்கள் எவ்வாறு உறுதி செய்கிaர்கள்?
பதில்: நடந்த ஜனாதிபதி தேர்தலில் சிங்கள மக்களின் கணிசமான வாக்குகளுடன் தமிழ், முஸ்லிம் சிறு பான்மை மக்களின் 80 - 90 வீதமான வாக்குகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குக் கிடைத்தன. இதனை எதிர்தரப்பினரும் கூட ஏற்றுக் கொள் கின்றனர்.
அதே வாக்கு வங்கி சரியாமல் தொடர்ந்தும் நிலைத்திருக்கும் சூழ் நிலையே தற்போது நிலவுகிறது. அத்துடன் மஹிந்தவுக்குக் கிடைத்த 57 இலட்சம் வாக்குகளில் தற்போது சரிவு ஏற்பட்டிருக்கிறது. அக்கட்சி பெருந் தலைகளின் ஊழல், மோசடி ஒரு புறத் திலும் மறுபுறம் அவர்களது கட்சியில் நிலவும் பனிப்போர், பிளவு காரணமா கவும் மக்களிடையே அவர்கள் மீது ஏற்பட்டுள்ள விரக்தியும் சேர்ந்து ஐ.தே.கட்சி பக்கம் சாயும் நிலையில் மிகவும் பெரும்பான்மை வாக்குகள் எம்மை வந்தடையும் என்று உறுதியாகக் கூறலாம்.
கேள்வி: இடம்பெறவுள்ள தேர்தலில் களுத்துறை மாவட்டத்தின் நிலை எப் படி அமையும் என்று கருதுகிaர்கள்.
பதில்: இம்மாவட்டத்தின் ஐ.ம.சு. முன்னணி முக்கியஸ்தர்களின் ஊழல், மோசடிகள் அம்பலத்துக்கு வந்து கொண்டிருக்கின்றன. அதனால் அவர் களை ஓரம்கட்டி விட்டு கனவான் அரசியல் நடத்தும் வேட்பாளர்களையே மக்கள் ஆதரிக்கும் நிலவரமே இன்று மேலோங்கி வருகிறது. இம்மாவட்டத் திற்கு அரும் பெரும் சேவையாற்றிய சிங்கள, முஸ்லிம் அரசியல் தலைவர் களும் இன்று எங்கள் பக்கம்தான் இருக்கிறார்கள். இதனால் மக்கள் அலை ஐ.தே.கட்சியின் பக்கம் ஓயாது அடிக்கும் என்பதில் ஐயமில்லை.
கேள்வி: களுத்துறை மாவட்டத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் குறித்து நீங்கள் என்ன நினைக்கிaர்கள்?
பதில்: தொகுதிவாரி தேர்தல் முறை இருந்த சந்தர்ப்பத்தில் களுத்துறை மாவட்டத்தில் பேருவளைத் தொகுதி யில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் பேணப்பட்டு வந்திருக்கிறது. ஸ்ரீல.சு. கட்சியில் ஐ.ஏ. காதர், ஐ.தே.கட்சியில் பாக்கிர் மாக்கார் தெரிவு செய்யப்பட்டு வந்திருக்கிறார்கள்.
பின்னர் விகிதாசாரத் தேர்தல் முறை அறிமுகத்துடன் விருப்பு வாக்கில் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் மிகவும் பெரும்பான்மை விருப்புத் தேர்வில் வெற்றி பெற்ற வரலாறும் எமது தொகு திக்கு இருந்தது. 1989 ம் ஆண்டிலிருந்து அவர் 2004 ஆண்டு வரையும் இம் மாவட்டத்தை அலங்கரித்த பெருமை இருந்தது.
பின்னர் முஸ்லிம் வாக்குகளில் பல்வேறு காரணிகளால் வாக்குச் சிதறல் ஏற்பட்டு முஸ்லிம் பிரதிநிதித்து வத்துக்கு ஆப்பு வைக்கப்பட்டது.
நடக்கவிருக்கும் தேர்தல் எந்த அடிப்படையில் நடக்கப் போகிறதோ என்ற சந்தேகம் நிலவுகிறது. எப்படிப் போனாலும் முஸ்லிம் வாக்குகள் சிதறி சின்னா பின்னமாகாது அனைவரும் ஒரு முகப்பட்டு ஒரே பிரதிநிதிக்கு வாக்களிப் பதன் மூலம் அன்று எமது பிரதி நிதித்துவத்தை எப்படிப் பேணி வந் தோமோ அதே நிலையில் எமது பிரதி நிதித்துவத்தைப் பெற்றுப் பாதுகாக் கலாம்.
கேள்வி: ஜனாதிபதியின் 100 நாள் வேலைத் திட்டம் குறித்து எதிர்தரப்பினர் முன்வைக்கும் விமர்சனம் குறித்து கூறுங்களேன்.
பதில்: அவர்கள் அணிந்து பார்க்கும் கண்ணாடியில் தான் வித்தியாசமாகத் தோன்றும் கிறதேயன்றி பொருளில் எத்தகைய குறையும் இல்லை என்று சுருக்கமாக விடையளிக்கலாம்.
அதாவது 100 நாள் வேலைத் திட்டம் திருப்திகரமாக முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. விலை குறைப்பே மக்கள் எதிர்பார்ப்பு அது மஹிந்தவின் காலத்தில் ஏற்படாத அளவுக்கு பல பொருட்களின் விலைகள் குறைந் திருக்கின்றன.
சம்பள உயர்வும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆட்சிக்கு வந்து குறுகிய காலத்திற்குள் நூறு வீத பயன்பாட்டை எதிர்பார்க்க முடியாது. ஆனால் யுத்தத் தைக் காரணம் காட்டி மக்களுக்கு பூச்சாண்டி காட்டிய மஹிந்த யுத்தம் முடிந்தும் ஐந்து ஆண்டுகள் கழிந்த நிலையிலும் பொருட்களின் விலை யைக் குறைக்கவில்லை. பதிலுக்கு வாழ்க்கைச் செலவு உயர்ந்து கொண்டே தான் போனது. அதனாலேதான் அவர் மண்கவ்வினர்.
கேள்வி: பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டால் உங்களுக்கு வெற்றி பெறும் வாய்ப்பு இருக்கிறதா?
பதில்: ஆம், நிச்சயமாக உண்டு. மாகாண சபைத் தேர்தலிலே வெற்றி பெற்றதை விடவும் கூடிய மக்கள் ஆதரவுடன் பாராளுமன்றம் செல்லும் வாய்ப்பு இருக்கவே செய்கின்ற

ad

ad