புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஜூலை, 2015

எம்.எஸ்.வியின் பாடல்கள் என்றும் மக்கள் மனதில் ஒலிக்கும்:ஜெயலலிதா புகழஞ்சலி

திரை இசை உலகின் முடிசூடா மன்னன் எம்.எஸ்.விஸ்வநாதன் மறைவிற்கு இரங்கல் செய்தி வெளியிட்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரின் பாடல்கள் பாடல்கள் அன்றும், இன்றும்
, என்றும் மக்கள் மனதில் ஒலித்துக் கொண்டே இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

" `மெல்லிசை மன்னர்`  என்றும் `எம்.எஸ்.வி` என்றும் அன்புடன் அழைக்கப்படுபவரும் தமிழ்த் திரை உலகில் மாபெரும் சகாப்தமாக திகழும் பழம்பெரும் இசையமைப்பாளர், திரையுலக இசை மேதை திரு எம். எஸ். விஸ்வநாதன் அவர்கள் இன்று (14.7.2015) உடல்
நலக் குறைவால் மருத்துவமனையில் காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த மன வேதனையும், பெரும் துயரமும் அடைந்தேன்.

அன்பும், அடக்கமும், எளிமையும், இறைப் பற்றும் மிகுந்த திரு எம். எஸ். விஸ்வநாதன் அவர்களின் இசைப் பயணம் அவரது 13-வது வயதிலேயே ஆரம்பித்து விட்டது. இசையமைப்பாளர் திரு. சி.ஆர். சுப்பராமன் இசைக் குழுவில் பணி புரிந்த திரு. எம்.எஸ். விஸ்வநாதன் அவர்கள். திரு. டி.கே. இராமமூர்த்தியுடன் இணைந்து, திரு. சுப்பராமன் மறைவால் முழுமைப் பெறாமல் இருந்த " தேவதாஸ்", "சண்டிராணி", "மணமகள்" போன்ற படங்களை முடித்துக் கொடுத்தார்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நடித்த "ஜெனோவா" திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகிய திரு. எம்.எஸ். விஸ்வநாதன், "பணம்" திரைப்படம் முதல் "ஆயிரத்தில் ஒருவன்" திரைப்படம் வரை திரு கூ.மு ராமூர்த்தி அவர்களுடன் இணைந்து 700-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். பின்னர் 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் தனியாக இசை அமைத்துள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் 1200-க்கும் அதிகமான திரைப்படங்களுக்கு இசையமைத்து, பல்லாயிரக்கணக்கான பாடல்களுக்கு மெட்டமைத்தவர் திரு.எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள். 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த் திரைப்பட உலகில் கோலோச்சிக் கொண்டிருந்த பெருமைக்குரிய இசையமைப்பாளர் திரு. எம்.எஸ்.வி அவர்கள், ஆர்மோனியம், பியானோ, கீ போர்டு என மூன்றையும் மிகப் பிரமாதமாக வாசிக்கும் திறன் பெற்றவர்.

திரு எம். எஸ். விஸ்வநாதன் அவர்கள் தனித் தன்மை வாய்ந்த தனது குரலின் மூலம் 500-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இவர் இன்றைய இளைய தலைமுறை நடிகர்களுடன் நடித்ததோடு மட்டுமல்லாமல், வேறு இசைமைப்பாளர்கள் இசையமைத்த திரைப்படங்களில் கூட பாடல் பாடியவர் ஆவார்.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலான " நீராருங் கடலுடுத்த" என்ற பாடலுக்கு இசையமைத்து அனைத்து தமிழர்களின் நெஞ்சங்களிலும் நீக்கமற நிறைந்து இருக்கும் திரு எம். எஸ். விஸ்வநாதன் அவர்களின் இசையில், நான் "சூரியகாந்தி" என்ற திரைப்படத்தில், `ஓ மேரி தில்ரூப` "அன்பைத்தேடி" என்ற திரைப்படத்தில், சித்திர மண்டபத்தில்’; "திருமாங்கல்யம்" என்ற படத்தில், `உலகம் ஒரு நாள்`போன்ற மனதைக் கவரும் பல்வேறு பாடல்களை பாடியுள்ளேன்.


1965-ம் ஆண்டு நான் நடித்து வெளி வந்த " வெண்ணிற ஆடை" திரைப்படத்தில் உள்ள "கண்ணன் என்னும் மன்னன் பேரை சொல்ல சொல்ல" என்ற பாடல் பட்டிதொட்டிகளில் எல்லாம் பிரபலமடைந்தது. அதே ஆண்டில் வெளி வந்த, நான் புரட்சித் தலைவர் அவர்களுடன்  இணைந்து நடித்த முதல் படமான " ஆயிரத்தில் ஒருவன்" திரைப்படத்தில் காலத்தால் அழியாத புகடிந பெற்ற "நாணமோ" , "அதோ அந்த பறவை போல"  பல  பாடல்கள் சாகா வரம் பெற்ற பாடல்களாக அமைந்திருந்தன. இவர் இசையமைத்த பாடல்கள் அன்றும், இன்றும், என்றும் மக்கள் மனதில் ஒலித்துக் கொண்டே இருக்கும் என்றால் அது மிகையாகாது.

ad

ad