புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஜூலை, 2015

தமிழரசுக்கட்சியின் "அநீதிக்காக" மற்ற தமிழ்க்கட்சிகள் பாதிக்கப்படக்கூடாது: அனந்தி


தேர்தலில் போட்டியிட தனக்கு வாய்ப்பளிக்க மறுத்த தமிழரசுக் கட்சியின் அநீதிக்காக, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலுள்ள மற்ற தமிழ்க்கட்சிகள் பாதிக்கப்படக்கூடாது
என்பதனாலேயே, தான் சுயேச்சையாக போட்டியிடவில்லை என்கிறார் அனந்தி சரிதரன்.
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட தமிழரசு கட்சி வாய்ப்பளிக்காமல் தனக்கு அநீதி இழைத்துவிட்டதாகவும், ஆனால் தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் இருக்கும் மற்ற தமிழ்க்கட்சிகள் தனது தரப்பு நியாயத்தைப் புரிந்துகொண்டிருந்தன என்றும் கூறினார் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் சார்பில் வடமாகாணசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அனந்தி சசிதரன்.
அந்த பின்னணியில், இந்தத் தேர்தலில் தான் சுயேச்சையாக போட்டியிட்டால், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் இருக்கும் தமிழரசுக் கட்சி தவிர்த்த மற்ற தமிழ்க்கட்சிகளின் பலத்தையும் அது சிதைக்கும் என்பதால் அதை செய்ய தான் விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்தார். அதனாலேயே சுயேச்சையாக போட்டியிடுவதாக அறிவித்திருந்த தனது முடிவை மாற்றிக்கொண்டதாகவும் அவர் கூறினார்.
இந்தத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடப்போவதாக முன்பு தெரிவித்திருந்த அனந்தி, வேட்புமனு தாக்கல் செய்வதற்கான இறுதிநாளிலும் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்யாதது ஏன் என்கிற கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் இணைந்து ஜனநாயகப் போராளிகள் கட்சி என்கிற புதிய கட்சி அமைத்து இந்த தேர்தலில் போட்டியிடும் பின்னணியில், விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளரான எழிலனின் மனைவியான நீங்கள் ஏன் அந்த கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிடவில்லை என்கிற கேள்விக்கு பதிலளித்த அனந்தி,
�விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்களின் பாதுகாப்பு இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை; இராணுவ அச்சுறுத்தல் மற்றும் கண்காணிப்பின் கீழேயே அவர்கள் இன்னமும் வாழ்கிறாரகள். இந்த பின்னணியில் அவர்களுடன் இணைந்து நான் இந்த தேர்தலில் போட்டியிட்டால் ஒருவேளை அவர்களில் யாருக்கேனும் ஏதேனும் உயிராபத்து அச்சுறுத்தல் நிகழுமாக இருந்தால் நானும் அதற்கொரு காரணமாக இருந்துவிடக்கூடாது என்பதே என்னுடைய நிலைப்பாடாக இருந்தது. அதனாலேயே நான் அவர்களுடன் இணைந்துகொள்ள விரும்பவில்லை� என்றார்.

ad

ad