மறைந்த இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு மு.க. ஸ்டாலின் நேரில் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் :
அவர் உடல் நலிவுற்று மறைந்த செய்தியை அறிந்த கலைஞர் மிகுந்த அதிர்ச்சிக்கும், வேதனைக்கும் ஆளாகியிருக்கிறார்.
அவரை இழந்து வாடிக்கொண்டிருக்கக் கூடிய அவரது குடும்பத்திற்கும், கலையுலகை சார்ந்த நண்பர்களுக்கும் கலைஞரின் சார்பிலும் திராவிட முற்போக்கு கழகத்தின் சார்பிலும் தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.