புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 செப்., 2015

குர்கானில் சவுதி அரேபியா தூதர் வீட்டில் இருந்து பெண்கள் மீட்பு, பாலியல் பலாத்காரம் செய்து துன்புறுத்தியதாக புகார்

 IST

டெல்லியை அடுத்த குர்கானில் சவுதி அரேபியா தூதர் வீட்டில் இருந்து இரண்டு பெண்கள் மீட்கப்பட்டு உள்ளனர். தங்களை பாலியல் பலாத்காரம் செய்து துன்பு
றுத்தினர் என்று பெண்கள் குற்றம் சாட்டிஉள்ளனர். 

குர்கானில் சவுதி அரேபியா தூதர வீட்டில் நேபாளம் நாட்டை சேர்ந்த இரண்டு பெண்கள் வீட்டு வேலை செய்து வந்து உள்ளனர். 44 மற்றும் 20 வயது கொண்ட பெண்கள் (தாய்-மகள் என்று கூறப்படுகிறது) சவுதி ஓட்டலில் பணியாற்றி பின்னர் இந்தியாவில் சதிய அரேபியா தூதர வீட்டில் பணிக்கு சேர்க்கப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 4 மாதங்களாக இந்த பெண்கள் வீட்டில் அடைத்து வைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டு உள்ளனர். அவர்களை சுமார் ஒரு நாளைக்கு 8 ஆண்கள் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர் என்று தெரியவந்து உள்ளது. 

பாதிக்கப்பட்ட பெண்கள் பேசுகையில், “நாங்கள் கடந்த 3-4 மாதங்களாக வீட்டில் சிறை வைக்கப்பட்டு இருந்தோம். அவர்கள் எங்களை பாலியல் பலாத்காரம் செய்தனர். எங்களை பூட்டி வைத்து இருந்தனர். அவர்கள் எங்களுக்கு சாப்பிட எதுவும் தரவில்லை” என்று கூறிஉள்ளனர். சவுதி அரேபியா தூதர் வீட்டிற்கு அப்பகுதியை சேர்ந்த பெண் வீட்டு வேலைக்கு சென்றபோதே இச்சம்பவம் வெளியே தெரியவந்து உள்ளது. வீட்டிற்குள் கொடுமை நடப்பதை அப்பெண் வெளியே கொண்டு வந்து உள்ளார். இதனையடுத்து தொண்டு நிறுவனம் ஒன்று நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட பெண்களை மீட்டது. 

பாதிக்கப்பட்ட பெண்கள் தரப்பில் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது. நேபாள தூதரகமும் ஆதரவாக புகார் தெரிவித்து உள்ளது. பெண்கள் மிகவும் துன்புறுத்தப்பட்டு உள்ளனர் என்றும் அவர்கள் மிகவும் அச்சத்துடன் உள்ளனர் என்றும் தெரியவந்து உள்ளது. “சவுதி அரேபியாவை சேர்ந்த சுமார் 7-8 பேர் வருவார்கள். எங்களை துன்புறுத்துவார்கள். நாங்கள் மறுப்பு தெரிவித்தால் தூதர் மற்றும் அவரது உறவினர்கள் எங்களை கொலை செய்துவிடுவோம், சடலத்தை சாக்கடையில் போட்டுவிடுவோம் என்று மிரட்டுவார்கள்,” என்று பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்து உள்ளனர். 

இவ்விவகாரம் தொடர்பாக பாலியல் பலாத்கார வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கிடையே யாரெல்லாம் இந்த குற்றச்செயலில் ஈடுபட்டனர் என்பது தொடர்பாக தெளிவாகவில்லை என்று கூறப்படுகிறது. போலீசார் இதுதொடர்பாக விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே சவுதி அரேபியா தூதரகம் இதனை மறுத்து உள்ளது.

ad

ad