புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 செப்., 2015

ஹரி ஆனந்தசங்கரிக்கு எதிராக வன்செயல்களில் ஈடுபடும் குழு?


கனடாவில் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் வெற்றிவாய்ப்புள்ள தமிழராக கருதப்படுவரும் மனிதவுரிமை ஆர்வலருமான ஹரி ஆனந்தசங்கரிக்கு எதிரான வன்முறையில் திட்டமிட்ட ரீதியில் ஒரு குழு இறங்கியுள்ளது.
இலங்கைப் போர்க் குற்றவிசாரணை தொடர்பாக தனது சொந்தப் பணத்திலேயே சுமார் 35 தடவைகளிற்கு மேல் சுவிஸ்லாந்து ஐ.நா.மனிதவுரிமை மன்றிற்குச் சென்று குரல் கொடுத்தவரும், இப்போது குரல் கொடுத்துக் கொண்டிருப்பவருமான ஹரி ஆனந்தசங்கரி தமிழர்களிடையே மிகுந்த செல்வாக்குள்ள ஒரு பண்பாளர் ஆவார்.
கனடியப் பல்லினத்தவரிடையே மாத்திரமல்லாது, உலகத் தமிழ் தலைவர்களிடமும் மிகுந்த நட்பைப் பேணும் ஹரி ஆனந்தசங்கரி லிபரல் கட்சியின் வேட்பாளராக தேர்வு செய்யப்படுவதற்கான தேர்தலில் போட்டியிட்ட போது ஹரி இலங்கையில் இடம்பெற்றது “இனப்படுகொலை” என்று கூறவில்லை எனக் கூறி,
அவரை எதிர்த்த ஒரு சிறு தமிழ்க் குழுவொன்று இலங்கை இனப்பிரச்சினை பற்றிய நடவடிக்கைகளில் அதுவரை காலமும் ஈடுபடாதிருந்த ஒரு இந்தியரை ஆதரிக்குமாறும் மேற்படி இந்தியர் இலங்கையில் இடம்பெற்றது “இனப்படுகொலை” என்று கூறுகின்றார் என்றும் வன்மப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போதும்,
ஹரி ஆனந்தசங்கதியின் இராஜாங்க மற்றும் பண்பான அணுகுமுறைகளை அறிந்திருந்த தமிழர்கள் அவருக்கு பெரிய அளவில் உட்கட்சித் தேர்தலில் வாக்களித்து பல நூற்றுக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் அவரை வெல்ல வைத்தனர்.
இந்த உட்கட்சித் தேர்தலின் போது உலகத் தமிழர் பேரவை வன.பிதா. இமானுவேல், கௌரவ இரா.சம்பந்தன் உள்ளிட்ட 72 தலைவர்கள் ஹரி ஆனந்தசங்கரியை ஆதரித்தது ஒரு மாறுபட்ட நிகழ்வாக அன்றைய காலகட்டத்தில் பார்க்கப்பட்டது.
இப்போது தேர்தல் அறிவிக்கப்பட்ட பிரச்சாரங்களில் ஈடுபடும் ஹரி ஆனந்தசங்கரிக்கு எதிரான அவரது தேர்தல் பதாதைகளை அறுத்தல், நாசம் செய்தல் போன்ற செயல்களில் இனந்தெரியாத மேற்படி குழு ஈடுபட்டு வருகின்றது. இது மக்களிடையே ஹரி ஆனந்தசங்கரிக்கான ஆதரவை மேலும் வலுப்படுத்துகின்றது.

ad

ad