புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 நவ., 2015

ஒரு அன்பான வேண்டுகோள்

செய்வோமா நண்பர்களே ! பகுதி 1 >>#புங்குடுதீவு கல்வி ஊக்குவிப்பு . >>>>>>> புங்குடுதீவில் கல்வி வளர்ச்சி சரிவடைந்து காணப்படுவதற்கு பல காரணங்களை பலரும் பலவிதமாக முன்வைக்கின்றோம் . மாணவர்களுக்கு கல்வியில் அக்கறையில்லை என்றும் பெற்றோரின் ஊக்குவிப்பு குறைவு எனவும் அதிபர் , ஆசிரியர்கள் குற்றச்சாட்டுகின்றனர் . அதேபோலவே சில ஆசிரியர்கள் ஏனோதானோ வென கற்பிப்பதாகவும் எப்படா மணியடிக்கும் ! பஸ்ஸ பிடிச்சு வீட்டுக்கு போகலாமென்ற மனோநிலையில் காணப்படுவதாகவும் சில பெற்றோரும் , மாணாக்கரும் குற்றச்சாட்டுகின்றனர் . >>>> எவ்வாறாயினும் புங்குடுதீவில் ஒட்டுமொத்தமாக தற்போதைய ( 2014 ஆண்டு கணக்கெடுப்பு ) மாணவர்கள் எண்ணிக்கை 1100 ஆகும் . ஆசிரியர்கள் எண்ணிக்கை 80 ஆகும் . புங்குடுதீவில் தற்சமயம் 9 பாடசாலைகள் இயங்கிவருகின்றன. புங்குடுதீவு மகாவித்தியாலயம் உயர்தர பிரிவு வகுப்பு ( A / L ) உடைய பாடசாலையாகவும் , சித்திவிநாயகர் , கமலாம்பிகை , கணேசா , சுப்ரமணியா போன்ற 4 பாடசாலைகள் இடைநிலை ( primary 2 ordinary level ) பாடசாலைகளாகவும் - ராஜேஸ்வரி , துரைச்சுவாமி , அமெரிக்க மிஷன் , றோமன் கத்தோலிக்க பாடசாலையென 4 ஆரம்ப பிரிவு பாடசாலைகள் இயங்கி வருகின்றன . அதாவது 1100 மாணவர்களுக்கும் 80 ஆசிரியர்களுக்கும் 9 பாடசாலைகள் . உண்மையில் இதுவோர் அதிசயம் . இலங்கையில் எந்தவொரு ஊரிலும் இந்நிலையில்லை . இதன் காரணமாக போதியளவு பௌதீக வளங்களினை மத்திய அரசிடமிருந்தோ , மாகாண அரசிடமிருந்தோ பெற்றுக்கொள்ள முடியாதுள்ளது. அவர்களிடம் உதவி கேட்டால் அவர்கள் கேட்கும் ஒரே கேள்வி இதுதான் : உங்கள் பாடசாலைகளில் மாணவர் எண்ணிக்கை மிகவும் குறைவு இந்நிலையில் எப்படி மேலதிக ஆசிரியர்களையும் , பௌதீக வளங்களையும் தரமுடியும் ? உதாரணமாக கடந்த வருடம் அமெரிக்கமிஷன் , இராஜேஸ்வரி பாடசாலைகள் எதிர்ப்பின் மத்தியிலும் மீளவும் ஆரம்பிக்கப்ட்டன . அமெரிக்க மிஷனில் 39 மாணவர்கள் , 3 ஆசிரியர்கள் - இராஜேஸ்வரியிலோ 13 மாணவர்கள் 2 ஆசிரியர்கள் ! என்ன கொடுமை கன்னங்கரா இது ! அப்ப எப்படி பிள்ளைகள் சித்தியடைவதை எதிர்பார்க்கமுடியும் ? ஆகமொத்தத்தில 4000 சனமேயுள்ள புங்குடுதீவில் வட்டாரத்திற்கு வட்டாரம் கோயில்களும் , பாடசாலைகளும் , விளையாட்டு கழகங்களும் அதிகம் . இதுவே புங்குடுதீவின் வளர்ச்சிக்கு தற்போது தடையாகவுள்ள பிரதான காரணமென எனது தந்தை வே. சு . கருணாகரன் தனது நினைவுகளும் - கனவுகளும் எனும் நூலில் குறிப்பிட்டுக் கூறியுள்ளார் . அதிபர் பதவிக்காகவும் வேறு பல சுயநல தேவைகளுக்காகவும் சிலர் இம்முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டுகிறார் . உதாரணமாக றோமன் கத்தோலிக்க பாடசாலை மீளவும் ஆரம்பிக்கபட்டதை ( 2004) தான் கடுமையாக எதிர்த்து தடுத்ததாகவும் ஆனால் குறிப்பிட்ட காலத்தின் பின்னர் சில ஆக்கிரமிப்பு - வாக்கு வங்கி அரசியல் சக்திகளின் தலையீட்டினால் றோமன் கத்தோலிக்க பாடசாலை மீளவும் ஆரம்பிக்கபட்டதாகவும் அதனால் இரு பாடசாலைகளின் [ மகா வித்தியாலயம் - றோமன் ] கல்வியும் சீர்குலைந்ததாகவும் ஆதங்கப்பட்டுள்ளார் . >>>> ஆம் அவ் ஆதங்கத்தினை தற்பொழுதே சிலர் உணர்ந்துள்ளனர் . றோமன் கத்தோலிக்க ஆரம்ப பாடசாலை மீள ஆரம்பிக்கப்பட்டதால் மகா வித்தியாலத்தின் ஆரம்ப பிரிவினை மூட வேண்டிய நிலை ஏற்பட்டது . அங்கு சீராக கற்று வந்த மாணவர்கள் றோமனுக்கு சென்றனர் . 2014 ஆண்டு தகவல்படி றோமனில் 100 மாணவர்களும் 7 ஆசிரியர்களும் காணப்பட்டனர் . புங்குடுதீவிலே அங்குதான் அதிக ஆரம்ப பிரிவு மாணவர்கள் . ஆனாலும் ஒரு பிள்ளையேனும் இந்த ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையவில்லை . 6 ஆண்டு வந்தவுடன் அவர்கள் மீளவும் புங்குடுதீவு மகா வித்தியாலத்திற்கே திரும்புகின்றனர் . இப்பொழுது பார்த்தீர்களா ? ஆசிரிய வளம் துண்டாடப்படுவதனை ? >>>> தொடரும் .>> குணாளன் கருணாகரன் 13.11.2015
பிடித்திருக்கிறது · கருத்து · அறிவிப்புகளை நிறுத்து· பகிர்
Sritharan ThirunavukkarasuTharshaanan ParamalingamThiru Sivasamy மற்றும்வேறு 17 பேர்கள் இதை விரும்புகிறார்கள்.
கருத்துக்கள்
Papy Krishnasamy காலா காலமாகவே இப்படியான சீர்கேடுகள் நடப்பதற்கு அரசியல்வாதிகளிலிருந்து அவர்களுக்கு தூக்குக்காவடியாடும் ஒரு 

ad

ad